தாராபுரம் ஆற்றல் அறக்கட்டளை நிறுவனருக்கு ஆன்மீக செம்மல் விருது வழங்கி கௌரவிப்பு!

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு கோவில்களை சீரமைத்தல் உள்ளிட்ட ஆன்மீக பணிகளை மேற்கொண்டு வந்த ஆற்றல் அறக்கட்டளை நிறுவனர் அசோக்குமாருக்கு 2023ஆம் ஆண்டுக்கான ஆன்மீக செம்மல் விருதை மதுரை ஆதினம் வழங்கி கௌரவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே ஆற்றல் அறக்கட்டளை நிறுவனர் அசோக்குமாருக்கு ஆன்மீக செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ஆற்றல் அறக்கட்டளை பல்வேறு ஆன்மீகப் பணிகளை செய்து வருகிறது இதனயொட்டி ஆற்றல் அறக்கட்டளை நிறுவனர் அசோக் குமார், புதிய கோவில்களை கட்டி கொடுப்பது, பழைய கோவில்களை புதுப்பித்து கொடுப்பது, அரசு பள்ளி கழிவறை கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம், பராமரிப்பின்றி இருக்கும் கட்டிடங்களை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், ஆற்றல் அறக்கட்டளை பொதுமக்களின் ஒத்துழைப்போடு நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்களை புனரமைத்து வருகிறது. இச்சேவையை பாராட்டி ஆற்றல் அரக்கட்டளை நிறுவனர் அசோக்குமாருக்கு ஆன்மீக செம்மல் விருதை மதுரை ஆதீனம் வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சூரியனார் கோவில் சிவ கிரக யோகிகள் ஆதீனம் 28வது குரு மகா சன்னிதானம், மகாலிங்க தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள், வேளாண் குறிச்சி ஆதீனம் சக்தியான மகா தேவ தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...