காரமடையில் கோழிக்கழிவுகளை சேகரிக்கும் நிறுவனத்திற்குப் பொதுமக்கள் எதிர்ப்பு

கோவையை அடுத்த காரமடையில் கோழிகழிவுகளை சேகரிக்கும் மையத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வார்டு உறுப்பினர் ராம்குமார் தலைமையில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.


கோவை: காரமடையில் கோழிக்கழிவுகளை சேகரிக்கும் நிறுவனத்திற்குப் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை நகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டில் எம்.ஆர் நகர், சிவாஜி நகர், அப்துல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

எம்.ஆர். நகர், சிவாஜி நகர் பகுதியில் உள்ள ஒருவர் வீட்டின் முன்பு நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கோழிக்கழிவுகளை சேகரித்து இப்பகுதிகளில் கொண்டு வந்து சேகரித்து வைத்து வருகிறார்.

அதன்பின் இந்த கழிவுகளை ஒரு கலவையாக்கி சென்னையில் நாய்களுக்கு உணவு தயாரிக்கும் தனியார் நிறுவனத்திற்கு அனுப்பப் படுவதாக இப்பகுதி மக்கள் புகார் கூறி வருகின்றனர். கோழி கழிவுகளால் இப்பகுதி சுற்றிலும் காற்று மாசுபடுவதுடன், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் எந்நேரமும் இப்பகுதியினர் தொடர்ந்து வீடுகளை பூட்டி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாகச் சுற்றுவட்டார குடியிருப்பு வாசிகள் சம்பந்தப்பட்ட நபரிடம் புகார் தெரிவித்து, அதனை அப்புறப்படுத்த வேண்டும் எனக் கேட்டுள்ளனர். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்து வருகிறார். இதையடுத்து இன்று இப்பகுதியில் சேகரித்து வைத்துள்ள கோழிக்கழிவுகளை அப்புறப்படுத்த கோரியும் குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவே இப்பணிகளை மேற்கொள்ளக்கூடாது எனவும், கூறி சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வார்டு உறுப்பினர் ராம்குமார் தலைமையில் சம்பந்தப்பட்ட நபரின் வீடு முன்பு குவிந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு காரமடை துப்புரவு ஆய்வாளர் வீரபாகு, மேற்பார்வையாளர் கார்த்திகேயன் ஆகியோர் நேரில் வந்து அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த கோழி கழிவுகள் அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதையடுத்து குடியிருப்புக்கு நடுவே ஏற்படுத்தி வைத்திருந்த கொட்டகையைக் கிராம மக்கள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் 3 மணி நேரத்தில் அப்புறப்படுத்துவதாகக் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...