முன்னாள் முதலமைச்சருக்கே தமிழகத்தில் பாதுகாப்பில்லை..! - கோவையில் எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியின் மீது மக்கள் கோபமாக உள்ளனர். முன்னாள் முதலமைச்சருக்கே பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும் அளவிற்கு தற்போது சட்ட ஒழுங்கு உள்ளது. திமுக அரசு தண்ணீர் தட்டுப்பாட்டை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று கோவையில் அரசுக்கு எதிராக அதிமுகவினர் நடத்திய போராட்டத்தில் எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.



கோவை: அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில், கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே அர்ஜுனன், பி.ஆர்.ஜி அருண்குமார், கந்தசாமி, கே.ஆர் ஜெயராமன், ஏ.கே செல்வராஜ் உட்பட 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்துகொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன், திமுக ஆட்சியின் மீது மக்கள் கோபமாக உள்ளனர். முன்னாள் முதலமைச்சருக்கே பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும் அளவிற்கு தற்போது சட்ட ஒழுங்கு உள்ளது. திமுக அரசு தண்ணீர் தட்டுப்பாட்டை உடனடியாக சரி செய்ய வேண்டும். குடிநீர் பிரச்சனைக்காக ஆங்காங்கே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...