உடுமலையில் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இட ஆக்கிரமிப்புகளை அகற்ற வலுக்கும் கோரிக்கை!

உடுமலை நகராட்சியில் பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், ஏற்கனவே உள்ள பூங்காக்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



உடுமலை நகராட்சிக்குட்பட்ட 33வது வார்டில் 300க்கும் மேற்பட்ட லே அவுட்கள் உள்ளன. இதில் பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்படும் இடம் ஆக்கிரமிப்பால் மாயமானது குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் 61 மனைப் பிரிவுகளில் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடம் ஆக்கிரமிக்கப்பட்டு வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. இந்த இடங்களை நீக்கும் வகையில் முதற்கட்டமாக நகராட்சி சார்பில் பூங்கா இடங்களில் தகவல் பலகை வைக்கப்பட்டன.

அதில் அவ்விடத்துக்கான வரைபடம் பரப்பளவு உள்ளிட்ட தகவல்கள் எழுதப்பட்டிருந்தன. மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி அனைத்து இடங்களிலும் பூங்கா அமைக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நகராட்சியில் திர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் போதுமான நடவடிக்கை எடுக்கப்படாமல் பூங்கா இடங்களில் மீண்டும் ஆக்கரிமிப்பு அதிகரித்துள்ளது. இவ்வாறு குடியிருப்புகளில் பூங்காவுக்கான இடங்களை முழுமையாக மீட்பது கேள்விக்குறியாக உள்ளது.



அதே வேளையில் ஏற்கனவே அமைக்கப்பட்ட பூங்காக்களின் நிலையும் தொடர் பராமரிப்பு இல்லாமல் பரிதாப நிலைக்கு மாறியுள்ளது.



எஸ்.என்.ஆர். லேஅவுட், ஸ்ரீநகர், அனுஷம் நகர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள சிறுவர் பூங்காவில் குழந்தைகளின் விளையாட்டு உபகரணங்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.



சில இடங்களில் பூங்காவின் கம்பி வேலி சிதைக்கப்பட்டு குடிமகன்களுக்கு மட்டுமே பயன்படும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் அனைத்து குடியிருப்புகளிலும் பொழுதுபோக்கு இடம் இல்லாமல் மக்கள் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளார்.

ஆகையால் உடுமலை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் பூங்கா இடங்கள் ஆக்கிரமிப்பை பாரபட்சம் இல்லாமல் அகற்ற வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்ட பூங்காவில் சேதம் அடைந்துள்ள உபகரங்கள் மற்றும் இதர கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்.

இல்லாவிட்டால் பல கோடி ரூபாய் மதிப்பில் உள்ள பூங்கா இடங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் கைவசம் முழுமையாக சென்று விடும் என உடுமலை பகுதி சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...