கோவையில் சுரங்கப்பாதை தடுப்புத் தூண் விழுந்து விபத்து - அரசுப் பேருந்து சேதம்

கோவையில் லங்கா கார்னர் ரயில்வே பாலத்தின் அருகில் இருந்த சுரங்கப்பாதை தடுப்பு தூண் திடீரென விழுந்ததில் அரசு பேருந்து சேதமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் இருந்து டவுன்ஹால் செல்லும் வழியிலே லங்கா கார்னர் ரயில்வே சுரங்க பாதை அமைந்துள்ளது. இந்த சுரங்க பாதையில் அதிக உயரம் கொண்ட வாகனங்கள் கடந்து செல்ல முடியாது. இதனால் முன் கூட்டியே வாகனங்கள் நிறுத்த இரும்பு தடுப்பு, சுரங்க பாதைக்கு முன்னதாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கம் போல அவ்வழியாக சென்ற அரசு பேருந்து தடுப்பை கடந்துச் சென்ற போது, பேருந்தின் மேல் பகுதியில் வைத்திருந்த ஸ்டெப்னி டயர், இரும்பு தடுப்பு மீது மோதியது.



இதனால்இரும்பு தடுப்பு உடைந்து பேருந்தின் மீது விழுந்தது. இதில் பேருந்தின் பின் பக்க கண்ணாடி நொறுங்கியது. ஆனால் அதிஷ்டவசமாக பயணிகளுக்கு எந்த பாதிப்பு இல்லை.



இதையடுத்து அங்கு வந்த போக்குவரத்து போலீசார்தடுப்புகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு மாற்று பாதையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இரும்பு தடுப்பு விழுந்த போது இரு சக்கர வாகனங்கள், கார்கள் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...