கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் - கோவை ரயில் நிலையத்தில் 3 பெண்கள் கைது!

கோவையில் இருந்து கேரளாவுக்கு ரயில் மூலம் ரேஷன் அரிசி கடத்த முயன்ற கோவை மற்றும் திருப்பூரை சேர்ந்த ஈஸ்வரி, ராஜலட்சுமி மற்றும் மேரி எனும் மூவரை ரயில்வே போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 500 கிலோ ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.


கோவை: திருச்சியில் இருந்து கோவை வழியாக பாலக்காடு டவுனுக்கு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் சிலர் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்திச் செல்வதாக ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

பாலக்காடு செல்வதற்கான பயணிகள் ரயில் கோவை ரயில் நிலையத்தில் உள்ள முதலாவது பிளாட்பாரத்திற்கு வந்தது. இதை அடுத்து, கோவை ரயில் நிலைய ஆய்வாளர் மீனாட்சி தலைமையிலான போலீசார் ரயிலில் ஏறி சோதனை நடத்தினர்.

அப்பொழுது 3 பெண்கள் 500 கிலோ ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதை அடுத்து, காவல்துறையினர் அரிசியை பறிமுதல் செய்தனர்.

பின்னர் மூன்று பெண்களையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் திருப்பூரைச் சேர்ந்த ஈஸ்வரி, ராஜலட்சுமி, போத்தனூரைச் சேர்ந்த மேரி என்பது தெரியவந்தது.

இவர்கள் திருப்பூர் மற்றும் கோவையில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்திச் சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது உறுதிசெய்யப்பட்டது.

தொடர்ந்து, இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா ? என்று மூன்று பெண்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...