பெருந்துறையில் அதிக வட்டி தருவதாக மோசடி - கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த சுசி லேண்டு புரமோட்டர்ஸ் என்ற நிறுவனம், கடந்த 2012ல் முதலீட்டாளர்களிடம் அதிக வட்டியுடன் பணத்தை கொடுப்பதாக கூறி ரூ.87.33 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைதான 4 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை மற்றும் ரூ.81.90 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கோவை: அதிக வட்டியுடன் பணத்தை திருப்பி கொடுப்பதாக கூறி முதலீட்டாளர்களிடம் மோசடி செய்த 4 பேருக்கு பத்தாண்டு சிறை தண்டனை விதித்து டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த சுசி லேண்டு புரமோட்டர்ஸ் என்ற நிறுவனம், கடந்த 2012ல் முதலீட்டாளர்களிடம் அதிக வட்டியுடன் பணத்தை கொடுப்பதாக கூறி ரூ.87.33 லட்சம் மோசடி செய்ததாக ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் எம்.எஸ்.குரு, அமுதன், பார்த்திபன், சுரேஷ் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். வழக்கு விசாரணை கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் வழக்கு விசாரணை நிறைவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் 4 பேரும் குற்றவாளிகள் என்றும், தலா 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.81.90 லட்சம் அபராதம் விதித்துத் தீர்ப்பு நீதிபதி ரவி உத்தரவிட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...