உடுமலை அருகே பச்சை மிளகாய் சாகுபடியில் நல்ல விளைச்சல் - விவசாயிகள் மகிழ்ச்சி!

உடுமலையை அடுத்த குடிமங்கலம் பகுதியில் மிளகாய் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. மிளகாய் சாகுபடி செய்வதால் எல்லா காலங்களிலும் நல்ல லாபம் ஈட்டமுடியும் என விவசாயிகள் மகிழ்ச்சி.



திருப்பூர்: உடுமலை அருகே குடிமங்கலம் பகுதியில் கிணற்றுப் பாசனம் மூலம் மிளகாய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள குடிமங்கலம் பகுதியில் மிளகாய் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மிளகாய் சாகுபடி செய்வதால் எல்லா காலங்களிலும் நல்ல லாபம் ஈட்டமுடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.



இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது, தென்னை நீண்ட காலப்பயிர் என்பதால் விவசாயிகள் கிணற்றுப் பாசனம் மூலம் சொட்டுநீர் பாசன முறையில் மிளகாய் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். பச்சை மிளகாய் பொதுவாக அன்றாட உணவுகளில் அதிகளவு பயன்படுத்தக் கூடியது. சைவம், அசைவம் என இரண்டு உணவுகளில் பச்சை மிளகாய்க்குத் தேவை உள்ளது.

ஒரு ஏக்கர் சாகுபடி செய்வதற்கு 400 கிராம் விதை தேவைப்படுகிறது. நாற்றங்கால் அமைத்து 40 நாட்களுக்குப் பிறகு பிடுங்கி நடவு செய்யலாம் அல்லது நாற்று வாங்கி நடவு செய்யலாம். நாற்றுக்கள் நடவு செய்த 30 நாட்களுக்குப் பிறகு தேவையான பயிர் எண்ணிக்கை இருக்குமாறு கலைத்து நடவு செய்வது அவசியம்.



பச்சை மிளகாயை நட்ட 75 நாட்கள் அல்லது விதைத்த 105 நாட்களிலிருந்து அறுவடை செய்யலாம். மேலும் தொடர்ந்து 3 முதல் 4 மாதங்களுக்குப் பச்சை மிளகாய் அறுவடை செய்யப்படும். முதல் இரண்டு பறிப்புகளில் பச்சை மிளகாயும், அடுத்த பறிப்புகளிலிருந்து பழுத்த மிளகாயும் அறுவடை செய்யலாம்.

ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 8 டன் வரை மகசூல் கொடுக்கும். குடிமங்கலம் பகுதியில் அறுவடை செய்யப்படும் மிளகாய் உடுமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அதிகளவில் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...