கோவையில் பெண்களுக்கான இன்னர்வீல் கிளப் அமைப்பு தொடக்கம்-புதிய நிர்வாகிகள் பதவியேற்பு!

கோவையில் பெண்கள் மட்டும் உறுப்பினர்களாக கொண்ட இன்னர் வீல் கிளப் கோயமுத்தூர் சினெர்ஜி எனும் புதிய அமைப்பு துவங்கப்பட்டது. இந்த விழாவில் அமைப்பிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.


கோவை: கோவையில் பெண்கள் மட்டும் உறுப்பினர்களாக கொண்ட இன்னர் வீல் கிளப் கோயமுத்தூர் சினெர்ஜி எனும் புதிய அமைப்பு துவங்கப்பட்டது.

கோவையில் இன்னர் வீல் மேற்கு பரிந்துரைப்படி இன்னர் வீல் கோயமுத்தூர் சினெர்ஜி எனும் புதிய அமைப்பு துவக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட தலைவர் ஆஷா சுனில், மாவட்ட இ.எஸ்.ஓ.சிந்து சேது ஆகியோர் கலந்து கொண்டனர்.



26 பெண் உறுப்பினர்களை கொண்டு செயல்பட உள்ள இந்த அமைப்பின் தலைவராக பிரியா ராம்குமார், செயலாளராக அசோக் சங்கீதா ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர். பல்வேறு சேவை திட்டங்களை முன்னெடுத்து செயல்பட, இன்னர்வீல் கோயமுத்தூர் சினெர்ஜி அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உறுதி எடுத்து கொண்டனர்.



முதல் சேவை திட்டமாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தற்காப்பு கலையான களரி, அடிமுறை, கராத்தே ஆகிய பயிற்சிகளை வேர்ல்டு களரி, அடிமுறை ஃபெடரேஷன் மற்றும் அட்வென்சர் மார்ஷியல் ஆர்ட் அகாடமி ஆகியோருடன் இணைந்து இலவசமாக ஒரு வருடம் பயிற்சி அளிக்க உள்ளதாக புதிய நிர்வாகிகள் தெரிவித்தனர்.



இந்நிகழ்ச்சியில் இன்னர் வீல் அமைப்பின் மூத்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...