கோவையில் சாலை தடுப்பில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

கோவை ஈச்சனாரி அருகே தனியார் கல்லூரியில் படிக்கும் அலெக்ஸ் ஜோசப், சல்மான் இருவரும் நள்ளிரவில் டீ குடித்துவிட்டு அறைக்கு திரும்பியபோது சாலை தடுப்பில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானதில் பலியாகினர். இதுகுறித்து மதுக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை ஈச்சனாரி அருகே கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலை தடுப்பில் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் அலெக்ஸ் ஜோசப் (20), சல்மான் (20), இருவரும் கோவை ஈச்சனாரி பகுதியில் அறையெடுத்து தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று அறையில் இருந்த அலெக்ஸ் ஜோசப் மற்றும் சல்மான் ஆகிய இருவரும் டீ குடிப்பதற்காக நள்ளிரவு 2 மணிக்கு தனது நண்பரின் இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு மலுமிச்சம்பட்டி நோக்கி பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் சென்றனர்.



பின்னர் மீண்டும் அறைக்கு வருவதற்காக சர்வீஸ் சாலையில் அதிவேகமாக வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோர தடுப்பின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கல்லூரி மாணவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து வந்த மதுக்கரை போலீசார் மாணவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...