பல்லடம் அருகே வரதட்சணை கேட்டு மனைவியின் குடும்பத்தாரை தாக்கிய கணவர்! - பரபரப்பு வீடியோ

பல்லடம் அருகே ஓராண்டு முன்பு விஜயன் - மோகனப்பிரியா திருமணம் செய்துக் கொண்டனர். இந்நிலையில் வரதட்சனை கேட்டு மோகனப்பிரியாவின் வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்து, அவரது குடும்பத்தாரை விஜயன் தாக்கிய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: பல்லடம் அருகே வரதட்சணை கேட்டு நள்ளிரவில் அடியாட்களுடன் மனைவியின் குடும்பத்தாரை இளைஞர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே புக்கிலிபாளையத்தை சேர்ந்தவர் விஜயன். இவர் மங்களம் பகுதியில் ஸ்டுடியோ ஒன்றை நடத்தி வருகிறார்.



இவரும், அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரது மகள் மோகனப்பிரியாவும், பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.



திருமணம் ஆன நான்கு மாதத்திலேயே விஜயன் மோகனப்பிரியாவிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும், இது குறித்து பல்லடம் மகளிர் காவல் நிலையத்தில் விஜயன் மீது மோகனப்பிரியா புகாரும் அளித்துள்ளார்.



பல்லடம் மகளிர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், நேற்றிரவு அடியாட்களுடன் வந்த விஜயன், மோகனப்பிரியாவின் வீட்டில் புகுந்து அவரது குடும்பத்தாரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்த மோகனப்பிரியாவின் தந்தை மூர்த்தி மற்றும் அவரது தாய் ஆகியோர் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோகனப்பிரியாவின் வீட்டில் புகுந்து விஜயன் தாக்குதலில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காதல் திருமணம் செய்த ஒரு வருடத்திலேயே வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், விஜயன் மீது கடும் நடவடிக்கை எடுத்து தனது மகளின் வாழ்க்கையை காப்பாற்றுமாறும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறும் மோகனப்பிரியாவின் தந்தை கோரிக்கை வைத்துள்ளார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...