தமிழக பட்ஜெட் - கொடிசியா அமைப்பு வரவேற்பு

தமிழக அரசின்‌ நிதிநிலை அறிக்கை 2023 - 2024யில்‌ சிறு குறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்களுக்கு பயனளிக்கும்‌ வகையில்‌ அமைந்துள்ள அறிவிப்புகளை கொடிசியா வரவேற்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.


கோவை: தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளை கொடிசியா அமைப்பு வரவேற்றுள்ளது.

அறிவிப்புகள் பின்வருமாறு:

* தொழில்‌ துறைக்கு 3,268 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு.

* 2,877 கோடி ரூபாய்‌ செலவில்‌ 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தலைசிறந்த திறன்‌ மையங்களாக மாற்றும்‌ திட்டம்‌.

* 711 தொழிற்சாலைகளிலுள்ள 6.35 இலட்சம்‌ தொழிலாளர்களுக்கு மக்களைத்‌ தேடி மருத்துவம்‌ திட்டம்‌ விரிவுபடுத்துவது. உயர்‌ இரத்த அழுத்தம்‌, நீரிழிவு போன்ற தொற்றா நோய்களுக்கு முக்கியத்துவம்‌ அளித்து இந்த மருத்துவ முகாம்கள்‌ நடத்தப்படும்‌. இத்திட்டத்தில்‌ புலம்பெயர்‌ தொழிலாளர்களும்‌ பயனடைவார்கள்‌.

* இளைஞர்களுக்கு தொழிற்சாலைகளிலேயே பயிற்சி அளித்திட, தொழில்‌ நிறுவனங்கள்‌ ஊக்குவிக்கப்படும்‌. தொழிற்சாலைகளில்‌ திறன்‌ பள்ளிகள்‌ (Factory Skill 56௦௦18) என்ற இத்திட்டத்திற்கு இந்த ஆண்டில்‌ 25 கோடி ரூபாய்‌ வழங்கப்பட்டுள்ளது.

* ரூபாய்‌ 77,000 கோடியில்‌ புதிய மின்‌ உற்பத்தி திட்டம்‌.

* தகவல்‌ தொழில்நுட்ப புரட்சியின்‌ இரண்டாம்‌ கட்டமாக சென்னை, கோவை மற்றும்‌ ஓசூர்‌ நகரங்களில்‌ டெக் சிட்டி அமைக்கப்படும்‌.

* கோயம்புத்தூர்‌ மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையில்‌ ஒரு செவிலியர்‌ கல்லூரி மற்றும்‌ விடுதியுடன்‌ கூடிய புதிய மல்டி ஸ்பெஷாலிட்டி வசதியின்‌ கட்டுமானம்‌.

* கட்டிட வரைபடங்களுக்கு ஆன்லைன்‌ மூலம்‌ அனுமதி பெற நடவடிக்கை.

* கோயம்புத்தூரில்‌ மெட்ரோ ரயில்‌ சேவைகளுக்கு ரூபாய்‌ 9,000 கோடி.

இதை தவிர கொடிசியா சிறுதொழில்‌ வளர்ச்சிக்காக கீழ்க்கண்டவற்றையும்‌ நிதிநிலை அறிக்கையில்‌ எதிர்பார்த்திருந்தது.

1. உயர்ந்து வரும்‌ மூலப்பொருள்‌ விலை குறித்த தீர்வு.

2. அனைத்து சிறு குறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்களுக்கு 6% வட்டி மானியம்‌ என்பதை நீட்டித்தல்‌.

3. எலக்ட்ரானிக்‌ பொருட்கள்‌ உற்பத்திக்கென சிறப்பு பொருளாதார மண்டலம்‌.

இவற்றையும்‌ மாநில அரசு கவனித்து, சிறு குறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ தீர்வுகாணும்‌ என நம்புகின்றோம்‌ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...