ஜவுளித்தொழில்‌ வளர்ச்சிக்கு பட்ஜெட்டில்‌ சிறப்பு திட்டங்களை அறிவித்த தமிழக அரசுக்கு சைமா பாராட்டு!

தமிழக அரசு இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில், ஜவுளித் தொழில் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்த தமிழக அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்களுக்கு தென்னிந்திய பஞ்சாலைகள்‌ சங்கம் நன்றி தெரிவித்து அறிக்கை.


கோவை: 2023-24ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில்,‌ ஜவுளித்தொழில்‌ வளர்ச்சிக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்த தமிழக அரசுக்கு தென்னிந்திய பஞ்சாலைகள்‌ சங்கம் (சைமா) பாராட்டு தெரிவித்துள்ளது.

பருத்தி நூல்‌ உற்பத்தியில்‌ 45%, விசைத்தறி துணி உற்பத்தியில்‌ 22%, கைத்தறி துணி உற்பத்தியில்‌ 12 %, பின்னலாடை துணி உற்பத்தியில்‌ 70%, வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தியில்‌ 40%, நூல்‌ ஏற்றுமதியில்‌ 60%, 60 லட்சம்‌ மக்களுக்கு நேரடி வேலை வாய்பை நல்கியும்‌, தமிழக ஜவுளித்‌ தொழில்‌ நாட்டின்‌ மூன்றில்‌ ஒரு பங்கு ஜவுளி வணிகத்தை தன்னகத்தே கொண்டு நாட்டின்‌ பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக விளங்கி வருகிறது.

விவசயாத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்பை நல்குவதும்‌ இந்த துறையே ஆகும்‌. முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ பதவியேற்ற நாள்‌ முதல்‌ ஜவுளித்துறையின்‌ முக்கியத்துவத்தை அறிந்து அதன்‌ வளர்ச்சியை ஊக்குவிக்கும்‌ வகையில்‌ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளார்‌.

இந்நிலையில், சைமா தலைவர் ரவி சாம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழக ஜவுளித்துறையின்‌ வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌. கைத்தறி மற்றும்‌ ஜவுளித்துறை அமைச்சர்‌ ஆர்‌.காந்தி மற்றும்‌ மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் தங்கம்‌ தென்னரசு ஆகியோருக்கு நன்றி.

இன்று அறிவித்துள்ள மாநில அரசின் நிதிநிலை அறிக்கையில்‌, விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும்‌ இலவச மின்சாரத்தின்‌ அளவை 750 யூனிட்டுகளில்‌ இருந்து 1000 யூனிட்டுகளாக உயர்த்தியதற்கு தமிழக அரசுக்கு பாராட்டு.

இந்த நடவடிக்கை விசைத்தறி துறையின்‌ போட்டி திறனை வலுப்படுத்துவதோடு, நாட்டின் 25 சதவீத நெசவு துணி உற்பத்தியில்‌ ஈடுபட்டுள்ள 1.64 லட்சம்‌ விசைத்தறி நெசவாளர்கள்‌ பயன்‌ அடைந்து, ஏற்றுமதியில்‌ முக்கிய பங்காற்றும்‌ என்பதில்‌ ஐயமில்லை

விருதுநகர்‌, வேலூர்‌, கள்ளக்குறிச்சி மற்றும்‌ கோவை ஆகிய இடங்களில்‌ புதிய சிப்காட்‌ தொழிற்பேட்டைகள்‌ அமைக்கப்படும்‌ என்ற அறிவிப்பு மிகவும்‌ வரவேற்கத்தக்க நடவடிக்கை. அது தற்போதைய காலகட்டத்தின்‌ தேவை‌. மத்திய அரசு சமீபத்தில்‌ அறிவித்த பி.எம்‌.மித்ரா டெக்ஸ்டைல்‌ பார்க்‌ திட்டத்தின்‌ கீழ்‌ தமிழகத்தில்‌ ஒரு பூங்கா அமைக்கப்படும்‌ என்று அறிவித்தது.

அதன்‌ பேரில்‌, தமிழக பட்ஜெட்டில்‌ ரூ.1,800 கோடி ஒதுக்கி அதற்காக சிப்காட்‌ மூலம்‌ 1,052 ஏக்கர்‌ நிலம்‌ கையகப்படுத்தி முடிக்கப்படும்‌ என்ற அறிவிப்பு உள்கட்டமைப்பு வசதிகள்‌ ஏற்படுத்த உதவும்‌‌. இந்த திட்டம்‌ செயலாக்கத்திற்கு வரும் பொழுது, ஜவுளி பதனிடும்‌ தொழில்‌ உட்பட ஒட்டு மொத்த ஜவுளி சங்கிலிக்கும்‌ உள்கட்டமைப்பு வசதியை வழங்கும்‌ என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கைத்தறி பொருட்களின்‌ தரத்தை மேம்படுத்த, ரூ.20 கோடி செலவில்‌ 10 சிறு கைத்தறி பூங்காக்கள்‌ உருவாக்கப்படும்‌ என்ற அறிவிப்புக்கு வரவேற்கிறோம். இதன்‌ மூலம்‌ சமீபத்திய தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும்‌, சந்தை இணைப்புகளுக்கும்‌ உதவும்‌‌.

விருதுநகர்‌, வேலூர்‌, கள்ளக்குறிச்சி மற்றும்‌ கோவை ஆகிய இடங்களில்‌ ரூ 410 கோடி மதிப்பீட்டில்‌ 22,000 பேருக்கு வேலை வாய்ப்பளிக்கும்‌ வகையில்‌ புதிய தொழில்‌ பூங்காக்கள்‌ என்ற அறிவிப்பையும் வரவேற்கிறோம். கங்கைகொண்டானில்‌ உள்ள சிப்காட்‌ தொழிற்பேட்யைில்‌ ரூ.50 கோடி மதிப்பீட்டில்‌ 1,500 பணியாளா்கள்‌ தங்கும்‌ வகையில்‌ தொழில்துறை குடியிருப்பு வசதி ஏற்படுத்தப்பட உள்ளது என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்க நடவடிக்கை.

2030ம்‌ வருடத்திற்குள்‌ மின்‌ உற்பத்தி திறனை இரட்டிப்பாக்கவும்‌, பசுமை மின்‌ சக்தியின்‌ ஆற்றலின்‌ பங்கை 50 சதவீதமாக அதிகரிக்கவும்‌ நிர்ணயிக்கப்பட்ட இலக்கு பாராட்டத்தக்கது. மேலும்‌ ஏற்றுமதி சந்தை சூழ்நிலையில நீடித்த நிலைத்தன்மையை முதன்மைபடுத்தி, பசுமை மின்‌ சக்தி ஆற்றலை பயன்படுத்தினால்‌ அது நீண்ட கால அடிப்படையில்‌ உதவும்‌. அது ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவாக அமையும்‌.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...