தமிழக பட்ஜெட் - தென்னிந்திய பொறியியல்‌ உற்பத்தியாளர்கள்‌ சங்கம் வரவேற்பு

தமிழ்நாடு பட்ஜெட்‌-2023 ஆனது மாநில தொழில்களில்‌ புரட்சியை ஏற்படுத்தவும்‌, அதன்‌ ஊழியர்களை மேம்படுத்தவும்‌, வளர்ச்சி, மற்றும்‌ முன்னேற்றத்திற்கு ஏற்ற சூழல்‌ உருவாக்கும்‌ என தென்னிந்திய பொறியியல்‌ உற்பத்தியாளர்கள்‌ சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


கோவை: தமிழக பட்ஜெட்டை வரவேற்று தென்னிந்திய பொறியியல்‌ உற்பத்தியாளர்கள்‌ சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தென்னிந்திய பொறியியல்‌ உற்பத்தியாளர்கள்‌ சங்கம் சார்பில் அறிக்கையில், தமிழ்நாடு பட்ஜெட்‌-2023 ஆனது மாநில தொழில்களில்‌ புரட்சியை ஏற்படுத்தவும்‌, அதன்‌ ஊழியர்களை மேம்படுத்தவும்‌, வளர்ச்சி, மற்றும்‌ முன்னேற்றத்திற்கு ஏற்ற சூழல்‌ உருவாக்கும்‌.

இந்த முன்முயற்சிகள்‌, தமிழகத்தை பொருளாதார முன்னேற்றம்‌ மற்றும்‌ புதுமைகளில்‌ முன்னணியில்‌ கொண்டு வரும்‌, “1 டிரில்லியன்‌ டாலர்‌ பொருளாதாரம்‌” என்ற முதலமைச்சரின்‌ கனவை நோக்கி மாநிலத்தை உந்தித்‌ தள்ளும்‌.

போக்குவரத்து, மின்‌ உள்கட்டமைப்பு, சுகாதாரம்‌ மற்றும்‌ கிராமப்புற மேம்பாடு போன்ற முக்கிய துறைகளுக்கு பட்ஜெட்‌ முக்கியத்துவம்‌ அளித்திருப்பது, மக்கள்‌ நலன்‌ மற்றும்‌ தொழில்களின்‌ வளர்ச்சிக்கான அரசாங்கத்தின்‌ உறுதிப்பாட்டின்‌ தெளிவான அறிகுறியாகும்‌.

பட்ஜெட்டில்‌ கோவைக்கான சிறப்பு திட்டங்கள்‌:

இந்த பட்செட்டில்‌ சிறு, குறு, மற்றும்‌ நடுத்தர தொழில்‌ நிறுவனங்களுக்காக (148046) ரூ.1,509 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு மெகா மின்‌ திட்டத்தை உருவாக்க 7,7000 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின்‌ மின்‌ உள்கட்டமைப்பில்‌ ஒரு சிறப்பான மாற்றமாக இருக்கும்‌ என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2030ஆம்‌ ஆண்டுக்குள்‌ 14,500 மெகாவாட்‌ மின்சாரம்‌ உற்பத்தி செய்யும்‌.

கோவையில்‌ மெட்ரோ ரயில்‌ தொடங்க, 2010 இல்‌ அறிவிக்கப்பட்டது. இப்பொழுது, 2023-24 பட்ஜெட்டில்‌, முதற்கட்டமாக 44 கிமீ தூரத்திற்கு 9000 கோடி ரூபாய்க்கு ஒப்புதல்‌ வழங்கப்பட்டுள்ளது.

கோவையின்‌ மைய பகுதியில்‌ செம்மொழி பூங்கா அமைக்க ரூ.172 கோடி ஒப்புதல்‌ வழங்கி, முதற்கட்டமாக ரூ. 44 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின்‌ டெக்‌ சிட்டி முயற்சிகளில்‌ ஒன்றாக கோயம்புத்தூர்‌ பட்டியலிடப்பட்டுள்ளது. கோவை நகரத்தை எழில்மிகு கோவையாக , ஒருங்கிணைந்த திட்டங்கள்‌ அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டங்கள்‌ கோவை நகரத்தை தொழில்துறை மற்றும்‌ பொருளாதார சக்தியாக மாற்றும்‌. ச்சூழல்‌ அதிக முதலீடுகளை ஈர்க்கும்‌, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்‌ மற்றும்‌ இந்தப்‌ பகுதிகளில்‌ வாழும்‌ மக்களின்‌ ஒட்டுமொத்த சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்தும்‌ எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...