கோவையில் பெண்ணிடம் 8 சவரன் தாலிச் செயின் பறிப்பு - முன்னாள் இராணுவ வீரர் கைது!

கோவையில் வீரபாண்டிப்பிரிவு பகுதியில் மகனுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த ராதாமணி பெண்ணிடம் மர்ம நபர்கள் 2 பேர் தாலிச் செயின் பறித்த வழக்கில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் பழனிநாதன் கைது செய்யப்பட்டார்.



கோவை: கோவை மாவட்டம் வீரபாண்டிப்பிரிவு, ஜோதிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராதாமணி. இவர் அவரது மகனுடன் தனியார் மருத்துவமனைக்கு இரு சக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் ராதாமணியில் கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பி செல்ல முயன்றுள்ளனர்.

இருப்பினும் ராதாமணியின் மகன் அவர்களை வாகனத்திலேயே துரத்தி மடக்கி, அருகில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் பிடித்துள்ளார். இருப்பினும் அதில் ஒரு நபர் பறித்த தாலி செயினுடன் தப்பி செல்லவே பிடிப்பட்ட மற்றொரு நபரை துடியலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அந்த நபர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பழனிநாதன்(வயது43) என்பதும் முன்னாள் ராணுவ வீரர் என்பதும், 7 வருடங்களுக்கு முன் சஸ்பெண்ட் ஆகியுள்ளதும் தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தப்பிச்சென்ற மற்றொரு நபரான ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முருகானந்தன் என்பவரை தேடி வருகின்றனர். செயின் பறிப்பு வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் கைதான சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...