கவுண்டம்பாளையம் அரசு ஊழியர் குடியிருப்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்!

கோவை கவுண்டம்பாளையம் அரசு ஊழியர்கள் குடியிருப்பு வளாகத்தில் மகளிர் தினத்தையொட்டி கடந்த 2 நாட்களாக நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


கோவை: கவுண்டம்பாளையம் அரசு ஊழியர்கள் குடியிருப்பில் நடைபெற்ற மகளிர் தின விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கோவை கவுண்டம்பாளையம் அரசு ஊழியர்கள் குடியிருப்பு வளாகத்தில் கடந்த இரண்டு நாட்களாக “நம்ம ஊரு கொண்டாட்டம்” என்ற தலைப்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் பரத நாட்டிய நிகழ்ச்சி, சிலம்பாட்டம் நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, பட்டிமன்றம், விளையாடுப் போட்டிகள் உள்ளிட்டவை நடைபெற்றது.



இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துடியலூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் பேசுகையில், வாழ்க்கையில் ஒழுக்க நெறிகளை பின்பற்றி வாழும் குழந்தைகள் ஆளுமை மிக்கவர்களாக வளர்கிறார்கள். பெண்கள் தங்களின் சுயமாக சிந்திக்கும் திறன் கொண்டவர்களாகவும், தன்னிச்சையாக செயல்படுவதும், ஆற்றல் பொருந்தியவர்களாகவும் இருப்பது மிகச்சிறந்த உழைப்புக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதை பார்க்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது, என்றார்.



அவினாசிலிங்கம் கல்லூரி பேராசிரியர் அகிலாண்டேஸ்வரி பேசுகையில், அனைவரும் உடற்பயிற்சி செய்வது யோகா பயிற்சி செய்வது மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வழி வகுக்கும், என்றார்.



இந்த நிகழ்வில், மாவட்ட தலைவர் லயன் சுபா சுப்பிரமணியம் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். அனிதா தேவி மனித வள மேம்பாடு மற்றும் மாணவர்களின் கல்வியறிவு பயிற்சியாளர்கள் பற்றிய குறிப்புகளை வழங்கினார்.



இளம் வழக்கறிஞர் அன்பு செல்வம், சட்டம் அனைத்து பெண்களும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் பற்றி எடுத்துரைத்தார். இறுதியாக விழா ஒருங்கிணைப்பாளர் சோபா நதியா நன்றி உரை நிகழ்த்தினார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...