கோவை அருகே தனியார் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து - பல லட்சம் ரூபாய் இழப்பு

கோவை போத்தனூர் பகுதியில் சலீம் என்பவருக்கு சொந்தமான பழைய பிளாஸ்டிக்குகளைத் தரம் பிரிக்கும் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்படும்போது உள்ளே யாரும் இல்லாததால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.


கோவை: கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்தவர் சலீம். இவர் போத்தனூர் அடுத்த மேட்டூர் சாய்பாபா கோயில் அருகே உள்ள காலி இடத்தில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள், மரச்சாமான்கள் மற்றும் காப்பர் கம்பிகளை தனியாக பிரிக்கும் குடோன் வைத்துள்ளார்.



நேற்று இரவு குடோனில் ஒயரில் உள்ள காப்பர் கம்பிகளை தனியாக பிரித்து எடுக்க தீ பற்ற வைத்ததாக தெரிகிறது. அந்த தீ அருகே உள்ள பிளாஸ்டிக் பொருட்களிலும், மரப்பொருட்களிலும் பரவி குடோன் முழுவதும் தீப்பிடித்து எரியத் துவங்கியது.



இதையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் குடோனில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

தீ விபத்து ஏற்படும்போது உள்ளே யாரும் இல்லாததால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் பிளாஸ்டிக் கழிவுகள் தீயில் எரிந்ததால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றத்துடன் புகை வெளியேறியதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...