கோவையில் பாலை சாலையில் கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டம்!

கோவை துடியலூரை அடுத்த இடிகரைப் பகுதியில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் முன்பாக பால் உற்பத்தியாளர்கள் பாலை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: துடியலூரை அடுத்த இடிகரைப் பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில் இடிகரை சுற்றுவட்டார பகுதியில் உள்ள இடிகரை சென்னமாநாயக்கன்பாளையம்,கோவிந்த நாயக்கன்பாளையம், மணியகாரம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் காலை மற்றும் மாலை வேலைகளில் பாலை விற்பனை செய்து வருகின்றனர்.

காலை ஆறு முப்பது மணிக்கு திறக்கப்படும் இங்கு ஒரு நாளைக்கு சுமார் 350 லிட்டர் வரை பாலை கூட்டுறவு சங்கத்தில் விற்பனை செய்து வருகின்றனர். கூட்டுறவு சங்கத்தின் மூலம் பெறப்படும் பால் அப்பகுதி பொதுமக்கள் வாங்கிச் செல்வதுடன் மீதமுள்ள பாலை ஆவினுக்கு அனுப்பி வைத்து விடுகின்றனர்.



இந்த நிலையில் மாடுகளை பராமரிப்பதற்கு தேவையான புண்ணாக்கு, பசும் தீவனம், ஆட்கள் கூலி உள்ளிட்டவர்கள் விலை உயர்வு காரணமாக பால் கொள்முதல் விலை கட்டுபடி ஆவதில்லை எனவே பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும் என்று இடிகரை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பாலை விற்பனை செய்து வரும் விவசாயிகள் இன்று பாலை சங்கத்தில் ஒப்படைக்காமல் சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



இதுகுறித்து பேசிய பால் உற்பத்தியாளர்கள், மாடுகளை பராமரிக்க தேவையான வேலை ஆட்கள், புண்ணாக்கு, பசும் தீவனம், மருத்துவச் செலவு உள்ளிட்டவை கடுமையாக விலை உயர்ந்துள்ளதால் எங்களால் பராமரிக்க இயலவில்லை, கூட்டுறவு சங்கம் கொடுக்கும் பால் விலை கட்டுபடியாகவில்லை. எனவே பாலின் விலையை உயர்த்தி தரவேண்டும். அரசு வங்கிகள் மூலம் கடன் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், என்றனர்.



பால் உற்பத்தியாளர்களின் இந்தத் திடீர் போராட்டத்தால், கூட்டுறவு சங்கத்தில் பால் வாங்க வந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் பால் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதில் ஒரு பெண்மணி இவ்வாறு போராட்டம் நடத்தினால் முன்னரே அறிவிக்க வேண்டும் எங்களுக்கு குழந்தைகள் வயதானவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பாலுக்கு எங்கு செல்வது என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் அங்கு பதற்றம் நிலவியது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...