சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும்..! - கோவையில் மநீம., கண்டன ஆர்ப்பாட்டம்!

கோவையில் சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு மநீம கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: மத்திய அரசின் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், ஆன்லைன் தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்காத ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில் மநீம கட்சி சார்பில் கோவை பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகம் அருகே மத்திய அரசை கண்டித்தும், ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மநீம கட்சியின் மாநில துணை தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சமையல் எரிவாயும் விலை உயர்வால் மீண்டும் விறகு அடுப்பில் சமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், ஆன்லைன் ரம்மியால் பல உயிர்கள் பறிபோவதாக தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பினர்.



மத்திய அரசின் மக்கள் விரோத போக்கால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மநீம தலைவர் உத்தரவின் படி வரும் நாட்களில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்த உள்ளதாக அக்கட்சியில் மாநில துணை தலைவர் தங்கவேல் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...