ராகுல் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவு - கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல்!

பிரதமர் மோடியின் குடும்ப பெயர் குறித்து அவதூறாக பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு 2ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை கண்டித்து கோவையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.



கோவை: காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டதை கண்டித்து கோவையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடியின் குடும்ப பெயர் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக வினர் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணையானது சூரத் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று அதில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

அதே சமயத்தில் ராகுல் காந்தி தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டு இடைக்கால ஜாமீனும் வழங்கப்பட்டது.



இந்நிலையில் ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்து இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர், தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.



இதற்காக கோவை ரயில் நிலையம் வந்தடைந்த சுமார் 50 மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் காவல்துறையினருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



இதனையடுத்து சாலையில் அமர்ந்த காங்கிரஸ் கட்சியினர், கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்து சென்றனர்.

இதனால் கோவை ரயில் நிலையம் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

சூலூர் நாகம நாயக்கன்பாளையம் குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கலக்கக் கடும் எதிர்ப்பு

கோவை சூலூர் அருகே பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகம நாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள ஊராழி குட்டையை ஆழப்படுத்தவும், சுத்...

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...