கோவை அரசு பேருந்தில் மூதாட்டியிடம் 5 பவுன் செயின் திருட்டு - போலீஸ் விசாரணை

கோவையில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த ஆர்எஸ் புரத்தை சேர்ந்த மூதாட்டி யசோதாவிடம், கூட்ட நெரிசலை பயன்படுத்தி 5 பவுன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்ற மர்ம நபரை சாய்பாபா காலனி போலீசார் தேடிவருகின்றனர்.


கோவை: கோவை மாநகரில் அடிக்கடி பேருந்து பயணிகளை குறிவைத்து தங்க நகைகளை திருடும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில், கோவை ஆர் எஸ் புரம் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி இவரது மனைவி யசோதா (வயது65). இவர் நேற்று மருத்துவமனைக்கு செல்ல கோவை பூ மார்க்கெட் பகுதியில் இருந்து சாய்பாபா காலனிக்கு செல்ல 11டி என்ற அரசு பேருந்தில் சென்றுள்ளார்.

அப்போது, சாய்பாபா காலனி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி பார்த்தபோது யசோதா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் செயின் மாயமானது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, பேருந்தில் பெண் பயணிகளை குறிவைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...