பெண் மீது ஆசிட் வீசிய சம்பவம் எதிரொலி - கோவை நீதிமன்றத்தில் கடும் கட்டுப்பாடு!

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, நீதிமன்றத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் அவர்களின் வாகனங்கள் கடுமையான சோதனைக்கு பின்னரே போலீசாரால் அனுமதிக்கப்படுகின்றனர்.



கோவை: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று கணவன் மனைவி விவகாரத்தில் மனைவி மீது கணவன் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பைப ஏற்படுத்தியது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த சிவா - கவிதா தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதாக தெரிகிறது.

இந்நிலையில் கணவன் சிவா ஒரு லிட்டர் அளவிலான ஆசிட்டை நீதிமன்றத்திற்குள் புகுந்து மனைவி கவிதா மீது ஊற்றினார். இதில், பாதிக்கப்பட்ட கவிதா 85 சதவீதம் அளவிலான காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் ஆசிட் ஊற்றியவுடன் தப்பிக்க முயன்ற சிவாவை பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் தர்ம அடிகொடுத்து பிடித்தனர்.



இச்சம்பவத்தின் எதிரொலியாக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தை சுற்றிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



அதே சமயம் நீதிமன்றத்திற்குள் வரும் நபர்களின் பை மற்றும் அவர்களை சோதனையிட்ட பிறகு நீதிமன்றத்திற்குள் அனுமதித்து வருகின்றனர்.



மேலும் பொதுமக்களின் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.



ஏனைய நுழைவு வாயில்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அவ்வழியாக வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

கோவைவ போலீசாரின் நடவடிக்கைக்கு வழக்கறிஞர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...