வரலாற்று உச்சம் தொடும் தங்கம் விலை - மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள், அதிர்ச்சியில் பொதுமக்கள்!

தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்துவருகிறது. 22 காரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ.44,480-க்கு விற்பனையாகிறது.


இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது சரிவைக் கண்டாலும், ஒட்டுமொத்தமாக அதன் வளர்ச்சி எப்போதும் ஏறுமுகத்தில்தான் இருந்து வருகிறது.

தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக ஏற்ற இறக்கத்தை கண்ட தங்கம், 2வது நாளாக மீண்டும் உயர்ந்துள்ளது. நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ.70 உயர்ந்த நிலையில், இன்று மேலும் ரூ.20 உயர்ந்து 5,560 ரூபாயாக உள்ளது. அதன்படி, சவரன் ஒன்று ரூ.44,480-த்திற்கு விற்பனையாகிறது.

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 103 ரூபாய் அதிகரித்து, 59,477 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்காவின் இரண்டு முக்கிய வங்கிகளான சிலிக்கான் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கி மற்றும் சுவிஸ் வங்கி ஆகியவை நெருக்கடியில் சிக்கியுள்ளதன் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டிவருவதாக பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்கிகளில் நிலவி வரும் நெருக்கடிக்கு மத்தியில் பங்கு சந்தைகளிலும் கடும் ஏற்ற இறக்கம் நிலவிவருகிறது. இதனால், பங்கு சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேறி வருகின்றன. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுவே தங்கம் விலையின் தொடர் உயர்வுக்கு காரணம் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்த வாரத் தொடக்கத்தில் 24 காரட் தங்கம் 10 கிராம், 1400 ரூபாய் ஏற்றம் கண்டு, 60,000 ரூபாயினை முதல் முறையாக கடந்தது. 2019 காலக்கட்டத்தில் 10 கிராமுக்கு 31,000 ரூபாயாக இருந்த தங்கம் விலையானது, நடப்பு ஆண்டில் 60,000 ரூபாய்க்கு மேலாக உயர்ந்துள்ளது. இது கடந்த 4 ஆண்டுகளில் 25% எனும் அளவுக்கு லாபம் கொடுத்துள்ளது. இதே காலகட்டத்தில் மற்ற முக்கிய முதலீடுகள் 15% எனும் அளவுக்கே லாபம் கொடுத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேநிலை நீடித்தால், வரும் வாரத்தில் 24 காரட் தங்கம் 10 கிராமின் விலையானது 61,000 - 62,000 ரூபாய் எனும் அளவுக்கு உச்சம் தொடலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 2050 - 2100 என்ற விலையை எட்டும் எனவும் கூறப்படுகிறது. மார்ச்.2023ல் மட்டும் தங்கத்தின் விலை இதுவரை 8% ஏற்றம் கண்டுள்ளது.

நிதித்துறை மற்றும் வங்கித்துறையில் நிலவி வரும் நெருக்கடிகளால், தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...