கோவையில் 6 குட்டைகள் மாயம்..! - விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடந்தது. ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமை தாங்கிய கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், 6 குட்டைகள் மாயமானதாகவும், அதை கண்டுபிடித்துத் தருமாறு கோரிக்கை மனு அளித்தனர்.


கோவை: கோவையில் 6 குட்டைகள் மாயமானதாக விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.



கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடந்தது. ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமை தாங்கினார்.



கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.



தொடர்ந்து மனுக்களும் கொடுத்தனர்.

கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பழனிசாமி பேசியதாவது:

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்வரத்து கால்வாய்கள், நீர் வழிப்பாதைகளில் உள்ள முட்புதர்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். கோடை மழை ஜூன் மாதம் முதல் தொடங்கும் முன்பு அனைத்து நீர் வழிப்பாதைகள் தூர்வாரப்பட வேண்டும். இதனை உள்ளாட்சி நிர்வாகம் பொதுப்பணித்துறை மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

உக்கடம் முதல் சின்ன வானொலி நிலையம் வரை 1985-ம் ஆண்டு அப்போதைய ஆட்சியர் ராமன் முயற்சியில் 7 இடங்களில் உருவாக்கப்பட்ட 90 ஏக்கர் குட்டைகளில் 6 குட்டைகள் காணாமல் போய் விட்டது.

எஞ்சி உள்ளது ஒரே ஒரு குட்டை தான். எனவே மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை மூலம் மேற்கண்ட 6 இடங்களில் உள்ள 90 ஏக்கர் குட்டைகளைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும்.

திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக் குழு தலைவர் கூறுகையில் பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் சாதிக்காய் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

அதனைப் பாதுகாக்க உலர் கலன்கள் இல்லை. இதனால் விவசாயிகள் நஷ்டமடைந்து வருகின்றனர். சாதிக்காய்கள் அதிக அளவு வீணாகப் போய்விடுகிறது. எனவே பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் உலர் கலன்களை அமைத்து தர வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

அன்னூர் விவசாயிகள் சங்கம் ரங்கசாமி கூறுகையில், அன்னூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த ஆண்டில் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது. அதே போல இந்த ஆண்டும் செய்ய வேண்டும், என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...