கோவையில் 10 இடங்களில் சிறப்பு வாகன சோதனை - விதிமீறியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை!

கோவையில் பொள்ளாச்சி ரோடு, பாலக்காடு ரோடு, மருதமலை ரோடு, பேரூர் பைபாஸ் ரோடு, காளப்பட்டி ரோடு உட்பட நகரில் 10 இடங்களில் சிறப்பு வாகன தணிக்கையில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர். இதில், தலைக்கவசம் அணிந்து பயணம் செய்த 429 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.


கோவை: கோவை மாநகரத்தில், இவ்வாண்டு வாகன விபத்துகள் நடைபெறாமல், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, "விபத்தில்லா கோவையாக" உருவாக்கும் பொருட்டு, மாநகர காவல் ஆணையரின் உத்தரவுப்படி, கோவை மாநகரில் பாலசுந்தரம் ரோடு டிராபிக் பார்க் அருகில், காளப்பட்டி ரோடு நேரு நகர் பஸ் ஸ்டாப், அவிநாசி ரோடு கொடீசியா ஜங்ஷன்,

இ-1 சிங்காநல்லூர் காவல் நிலையம் முன்பு, சரவணம்பட்டி to துடியலூர் ரோடு Dr.SNS காலேஜ் அருகில், பொள்ளாச்சி ரோடு ரத்தினம் காலேஜ், பாலக்காடு ரோடு கிருஷ்ணா காலேஜ், மருதமலை ரோடு அக்ரி 7-வது கேட், பேரூர் பைபாஸ் ரோடு ஜங்ஷன், சி-3 சாய்பாபா காவல் நிலையம் முன்பு என 10 இடங்களில் சிறப்பு வாகன தணிக்கை முகாம் நடத்தப்பட்டது.

இந்த சிறப்பு வாகன தணிக்கை முகாமில், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 443 இருசக்கர வாகன ஓட்டிகளில், 350 நபர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, 93 நபர்கள் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், பதிவு எண் இல்லாமல் வாகனம் ஓட்டிய 68 நபர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதேபோல், தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, அந்தந்த சிறப்பு வாகன தணிக்கை முகாமில், தன்னார்வ அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டு, அதன் தொடர்ச்சியாக, சிறுவர்கள் போக்குவரத்து பூங்காவில் (CHILDREN'S TRAFFIC PARK) உள்ள பயிற்சி மையத்தின் மூலமும், விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டது.

மேலும், தலைக்கவசம் அணிந்து பயணம் செய்த 429 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு, தொடர்ந்து வாகனங்களை இயக்கும்போது பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...