உக்கடம் அருகே 5 டன் ரேஷன் அரிசி கடத்தல் - லாரி உட்பட 8 வாகனங்கள் பறிமுதல்!

உக்கடம் அருகே இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஐந்து டன் ரேஷன் அரிசியை வெளி மாநிலங்களுக்கு கடத்தி செல்ல முயன்ற லாரி உட்பட எட்டு வாகனங்களை பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வு துறை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் உக்கடம் அருகே 5 டன் ரேஷன் அரிசியை கடத்திச் செல்ல முயன்ற 8 வாகனங்களை குடிமைப் பொருள் பழங்கள் துறை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை, சென்னை காவல்துறை கூடுதல் இயக்குனர் அருண் IPS பொறுப்பேற்ற பின்னர் தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் இன்று (25.03.2023) அதிகாலை 05.00 மணியளவில் கோயம்புத்தூர் பகுதிகளில் காவல் ஆய்வாளர் விவேகானந்தன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் கலைச்செல்வன் ஆகியோர் தலைமையில் 2 குழுவாக பிரிந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.



இதனிடையே உக்கடம் - செல்வபுரம் சாலையில் ஒரு மறைவான இடத்தில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த லாரியை சோதனை செய்தபோது அதில் தமிழக அரசால் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் அரிசி சுமார் 50 கிலோ வீதம் 60 மூட்டையில் என மொத்தம் 3000 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



அந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரணை செய்த போது தெற்கு உக்கடம் அண்ணா நகரை சேர்ந்த அபி என்கின்ற அபிப் ரஹ்மான் என்பவருக்கு சொந்தமான லாரி என்பது தெரிய வந்தது. அபி என்கின்ற அபிப் ரஹமான் தலைமறைவாகி உள்ளார். இவர் ஏற்கனவே எட்டு முறை கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் இருந்துள்ளார்.



இதேபோல், மதுக்கரை மரப்பாலம் அருகே SI கலைச்செல்வன் தலைமையான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த பொழுது அவ்வழியாக வேகமாக வந்த பிக்கப் வேனை நிறுத்தி சோதனை செய்த போது அதில் சுமார் 50 கிலோ வீதம் 40 மூட்டைகளில் சுமார் 2000 கிலோ பொது விநியோகத் திட்ட ரேஷன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



தொடர்ந்து வாகனத்தை ஓட்டி வந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த ஓட்டுநர் ராஜேஷிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் குனியமுத்தூர் P.K புதூரை சேர்ந்த குட்டி ராஜேந்திரன், அவரது அண்ணன் மகன் சூர்யா மற்றும் வாளையாறை சேர்ந்த சபீர் ஆகிய மூவரும் குனியமுத்தூர் பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி கள்ளத்தனமாக கேரளாவில் விற்பனை செய்து வரும்படி அனுப்பியதாகவும் தெரியவந்தது.



மேற்கண்ட இரண்டு வழக்குகளிலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட எட்டு வாகனங்கள் மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஓட்டுநர் சூர்யா என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தலைமறைவாகியுள்ள அபி என்கின்ற அபிப்ரகுமான், குட்டி ராஜேந்திரன், சூர்யா, மற்றும் சபீர் ஆகிய நான்கு பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...