வால்பாறையில் தவக்காலத்தையோட்டி கருமலை மாதாகோவில் வரை கிறிஸ்தவர்கள் நடைபயணம்

வால்பாறையில், ஈஸ்டர் தினத்தையொட்டி நடைபெறும் தவக்கால பிரார்த்தனைக்காக 12 கிலோமீட்டர் தொலைவு வரை கிறிஸ்தவர்கள் நடைபயணம் செய்து கருமலை மாதாகோவிலில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் 12 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டு, கருமலை மாதாகோவிலில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

கிறிஸ்தவர்கள் வரும் 9ஆம் தேதி இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு நாளை ஈஸ்டர் தினமாக கொண்டாடுகின்றனர். இதற்கு முன்னதாக 50 நாட்கள் தவம் இருந்து கொண்டாடுகின்றனர்.



இந்த தவக்கால நாட்களில் ஒவ்வொரு நாளும் கிறிஸ்தவ. ஆலயங்களில். விசேஷமான ஆராதனைகளும் திருப்பலிகளும் நடைபெறும். இதேபோல் வால்பாறையில் உள்ள திரு இருதய ஆலய பங்கு தந்தை ஜெகன் ஆண்டனி தலைமையில் ஒவ்வொரு நாட்களிலும் திருப்பலியும், ஆராதனையும், சிலுவைப்பாதையும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.



மேலும் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வரும் தவக்கால சிலுவைப்பாதை இந்த ஆண்டு இன்று காலை ஒன்பது மணிக்கு வால்பாறை. திரு இருதய ஆலயத்திலிருந்து புறப்பட்டு 12 கிலோமீட்டர் தூரம் 14 இடங்களில் கிருஸ்துவின் திருப்பாடுகளை நினைத்து பார்த்து சிறப்பு பிராத்தனைகள் நடத்தினர்.



இதனையடுத்து, கருமலை அன்னை வேளாங்கண்ணி ஆலயம் சென்று அங்கு ஜெகன் ஆன்டணி தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...