தகவல் அறியும் உரிமைச் சட்டம் செயலில் உள்ளதா? - கோவை ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் நூதன முறையில் மனு!

கோவையில் பாதாள சாக்கடை திட்டம் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்காததை கண்டித்து, கண்களில் கருப்பு துணியை கட்டியவாறு ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் நூதன முறையில் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் செயலில் உள்ளதா எனக்கேட்டு முதியவர் நூதன முறையில் மனு அளித்துள்ளார்.

கோவை நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசிங்கம் (74). இவர், தான் குடியிருக்கும் 44 வது வார்டு பகுதியில் செயல்படுத்தப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் குறித்து கடந்த 2022 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாதாள சாக்கடை திட்டத்தின் மதிப்பீடு, எத்தனை நபர்களுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ராஜசிங்கம் கேள்வி எழுப்பி இருந்தார்.



ஆனால் இதுகுறித்து எவ்வித முறையான பதிலும் மாநகராட்சி நிர்வாகத்தின் தரப்பில் இருந்து இதுவரை வராததால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர் தன் தலையை பாதி மொட்டை அடித்து கொண்டும், கருப்பு துணியை கண்ணில் கட்டியும், அவரது கேள்வியை கழுத்தில் தொங்கவிட்டவாறும் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தார். முதியவரின் இந்த நூதன எதிர்ப்பு அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதுகுறித்து முதியவர் ராஜசிங்கம் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தகவல் அறியும் உரிமைச் சட்டம் செயல்பாட்டில் உள்ளதா? மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கக்கூடிய திட்டங்கள் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அனுப்புவதில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஏன் இவ்வளவு தாமதம்?. தனது மனு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...