கனிமவளக் கொள்ளையை தடுக்க கோரிக்கை - கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக மனு

கோவையில் இருந்து கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கனிம வள கொள்ளை நடைபெறுவதை தடுப்பதற்கு மூன்று முக்கிய கோரிக்கைகளுக்கு ஆவண செய்ய வலியுறுத்தி பாஜக சார்பில் ஜல்லிக்கல் உள்ளிட்டவற்றை எடுத்து வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூதன முறையில் மனு அளிக்கப்பட்டது.


கோவை: கனிமவளக் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி பாஜக சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.



கோவை மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக கூறி கடந்த இரு மாதங்களாக பல்வேறு கட்சியினர், விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடமும் வலியுறுத்தப்பட்ட நிலையில் அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இந்நிலையில், அந்தக் குழு அமைத்த பின்பு ஒரு பர்மிட் சீட்டுக்கு ஒரு லோடு மட்டுமே கொண்டு செல்லப்படும் நிலையில், தற்போது அங்கீகரிக்கப்பட்ட அளவைவிட இரு மடங்கு எடுத்துச் செல்லப்படுவதாக கூறப்படுகிறது.



இந்தநிலை தொடர்ந்தால் கோவை பகுதி பாலைவனமாக மாறி எதிர்காலத்தில் வீடு கட்ட பயன்படுத்தப்படும் பொருட்கள் காட்சி பொருள்களாக மாறிவிடும் என கூறி பாஜக தெற்கு மாவட்டம் சார்பில் தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இதுபோன்ற செயல்களால் அரசாங்கத்திற்கு மிகுந்த வருவாய் இழப்பு ஏற்படும் என தெரிவித்த பாஜகவினர், அனைத்து வாகனங்களும் சட்டத்திற்கு உட்பட்ட எடையுடன் செல்கிறதா? என்பதை உறுதியாக கண்காணிக்க வேண்டும், transit yardல் இருந்து மட்டுமே கனிம வளங்கள் நம் பகுதியில் இருந்து பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.

விபி & கோ என்ற நிறுவனம் தனி அரசாங்கமாகவே செயல்பட்டு கல்குவாரிகளில் பர்மிட் ஷீட் கொடுத்து வருவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆவண செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், இந்த விதிமீறல்கள் தொடரும் பட்சத்தில் விவசாயிகளுடன் இணைந்து பாஜக நிர்வாகிகள் ஒவ்வொரு சோதனை சாவடியிலும் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.



மனு அளிக்க வந்தவர்கள் ஜல்லிக்கல் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வந்து அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...