கோவை செம்மொழி பூங்காவில் கால்டுவெல்லுக்கு நினைவுச் சின்னம் - கிறித்துவ கூட்டமைப்பு மனு!

கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் பகுதியில் திராவிட மொழிகளுக்கெல்லாம் தமிழ் மொழிதான் செம்மொழி என்று அறிவித்த ராபர்ட் கால்டுவெல்லுக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டுமென வலியுறுத்தி அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.


கோவை: கோவையில் அமைக்கப்படவுள்ள செம்மொழி பூங்காவில் கால்டுவெல்லுக்கு சிலை அமைக்க கோரி கிறிஸ்தவ கூட்டமைப்பினர் மனு அளித்துள்ளனர்.

கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் இடத்தில் திராவிட மொழிகளுக்கெல்லாம் தமிழ் மொழிதான் செம்மொழி என்று அறிவித்த ராபர்ட் கால்டுவெல்லுக்கு நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என்று அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பின் தலைவர் சகாயராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவில் அளிக்கப்பட்டது.

அப்போது பேசிய அவர்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரலாற்று சாதனை படைக்கும் வண்ணம் அனைத்து மதங்களையும் நேசிக்கும் முதல்வராக, முஸ்லிம் மதத்தினருக்கு உலமாக்கள் நலவாரியம் இருப்பது போல, இந்து கோவில்களில் பூசாரிகளுக்கு நலவாரியம் இருப்பது போல, தற்போது கிறிஸ்தவ திருச்சபை ஊழியர்களுக்கும் நல வாரியம் அமைத்து அதற்கான அரசாணை வெளியிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சருக்கும், சிறுபான்மை துறை அமைச்சருக்கும் கிறிஸ்தவ கூட்டமைப்பின் சார்பில் கிறிஸ்துவ திருச்சபை ஊழியர்களின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், கிறிஸ்தவரின் நீண்ட நாள் கோரிக்கையான கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் இடத்தில் திராவிட மொழிகளுக்கெல்லாம் தமிழ் மொழி தான் செம்மொழி என்று அறிவித்த கிறிஸ்தவ மிஷனரி ராபர்ட் கால்டுவெல்லுக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

Newsletter

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...