நுகர்வோர் பாதுகாப்பு தினம்: மார்ச் 29-ல் மாவட்ட ஆட்சியரகத்தில் கொண்டாட்டம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு!

கோவை மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா வரும் மார்ச் 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாணவ மாணவிகளுக்கான கவிதை, ஓவிய போட்டிகளுடன் நடைபெற உள்ளதாக, ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் வரும் மார்ச் 29ஆம் தேதி மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோவை மாவட்டத்தில், 2022-2023 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா வரும் 29ஆம் தேதி மாலை 3 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

இவ்விழாவில் நுகர்வோர் விழிப்புணர்வு தொடர்பான தலைப்புகளில் கவிதை போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டிகளில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

பொது சுகாதாரத்துறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை, சட்டமுறை எடையளவுகள் துறை மற்றும் இந்திய தர நிர்ணய அமைவனம், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் போன்ற அரசுத் துறையினர் மற்றும் மாவட்ட முகவரிப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர் கலந்து கொண்டு நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் கண்காட்சி மற்றும் நேரடி விளக்க செயல்பாடுகள் மற்றும் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...