விபத்து காப்பீட்டு தொகை இழுபறி - 8வது முறையாக ஆட்சியரிடம் மனு அளித்த போக்குவரத்துக் கழக ஊழியர்!

கோவை சுங்கம் பகுதியில் உள்ள பஸ் டெப்போவில் 30 ஆண்டுகளாக மெக்கானிக்காக பணியாற்றி வந்த மகேந்திரன், கடந்த 2020 ஆம் ஆண்டு விபத்தில் சிக்கி வலது காலில் எலும்பு முறிந்த நிலையில், விபத்து காப்பீடு கோரி மாவட்ட நிர்வாகத்திடம் 8 முறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் விபத்துக் காப்பீட்டுத் தொகை வழங்க கோரி அரசு போக்குவரத்து கழக ஊழியர் 8வது முறையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்டம் வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (59) இவர், மெக்கானிக்காக சுங்கம் பஸ் டெப்போவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மகேந்திரன், அரசூர் பகுதியில் விபத்தில் சிக்கினார். அதில் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, வேலைக்குச் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.

விபத்தில் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள்வதற்காக தனியார் மருத்துவமனையில் மகேந்திரன் ரூ.2 லட்சம் செலவு செய்துள்ளார். அரசுப் போக்குவரத்து கழகத்தில் இருந்து ஓய்வுபெற இன்னும் ஒரு வருடம் உள்ள நிலையில், காலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் விருப்ப ஓய்வுக்கும் விண்ணப்பித்துள்ளார்.



இந்நிலையில், விபத்து காப்பீட்டுத் தொகையான ரூ. 2 லட்சத்தை அரசுப் போக்குவரத்து கழகம் வழங்க உத்தரவிடக் கோரி, கோவை மாவட்ட நிர்வாகத்திடம் மகேந்திரன் தொடர்ந்து மனு அளித்து வருகிறார். இதுவரை 8 முறை மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மகேந்திரன் வேதனையுடன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் பேசியதாவது, 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்தும், அரசு போக்குவரத்துக்கழகம் காப்பீட்டு தொகையை வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது விபத்து மற்றும் வேலையின்மையால் எனது குடும்பம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது.

எனவே, எனது மனு குறித்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உடல்நலிவால் என்னால் அடிக்கடி நீண்ட தூரம் பயணிக்க இயலாது. எனது சூழ்நிலையை மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு உரிய தீர்வு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் வலியுறுத்தினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...