திருப்பூரில் பள்ளி மாணவர்களுக்கு சத்துமாத்திரை வழங்கும் திட்டத்தில் புதிய மாற்றம் - சுகாதாரத்துறை அறிவிப்பு!

திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு இரும்புச்சத்து மற்றும் போலிக் சத்து மாத்திரை வாரத்துக்கு ஒன்று வீதம் 52 வாரங்களுக்கு வழங்க வேண்டும் எனவும், வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவிப்பு.


திருப்பூர்: பள்ளி மாணவர்களுக்கு சத்து மாத்திரை வழங்கும் திட்டத்தில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு சத்து மாத்திரை வழங்கும் விதிகளில் சில மாற்றங்களை பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிகளுக்கும் விரிவான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, இரும்புச்சத்து மற்றும் போலிக் சத்து மாத்திரை வாரத்துக்கு ஒன்று வீதம் 52 வாரங்களுக்கு வழங்க வேண்டும். வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 400 மி.கி திறன் கொண்ட மாத்திரைகளும், 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு 500 மி.கி அளவிலான சத்து மாத்திரைகளும் வழங்க வேண்டும்.

இப்பணிக்கென பள்ளிகளில் ஒருங்கிணைப்பு அலுவலர் அல்லது ஆசிரியரை, தலைமை ஆசிரியர் நியமித்து கொள்ள வேண்டும். வாரத்துக்கு ஒரு மாத்திரை மட்டுமே வழங்க வேண்டும். அதை ஆசிரியர் முன்னிலையில் மாணவர் உண்பதை உறுதி செய்ய வேண்டும்.

மாத்திரை உட்கொள்ளும் முன் மாணவர் ஆரோக்கியமான மதிய உணவு எடுத்துக் கொண்டார்களா? என்பதை உறுதிப்படுத்திட வேண்டும். காய்ச்சல், மயக்கம், வாந்தி உள்ளிட்ட பாதிப்பு , ஏதேனும் உடல் நலக்குறைவு இருந்தால் அம்மாணவருக்கு மாத்திரை வழங்கத் தேவையில்லை.

மாத்திரை வழங்கும் நாளில் மாணவர் பள்ளிக்கு வர வில்லையெனில் அதற்கு அடுத்த நாள் சத்து மாத்திரை வழங்க வேண்டும். மாறாக அதற்கு அடுத்த வாரம் (வியாழன்) இரண்டு மாத்திரைகளை வழங்க கூடாது. சத்து மாத்திரை வழங்கிய விபரங்களை ஒவ்வொரு வாரமும் சேகரித்து பட்டியல் தயாரித்து வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து விரிவான வழிகாட்டுதல் மாவட்ட துணை இயக்குநர், மாநகராட்சி சுகாதார பிரிவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...