தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் புதுப்பிப்பு - கோவை மாவட்ட கல்வித்துறை எச்சரிக்கை!

கோவை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளிகள் உரிமத்தை முறையாகப் புதுப்பிக்காவிட்டால், பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் முறையாக செயல்படாத தனியார் பள்ளிகளுக்கு எதிராக மாவட்ட கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், தனியார் பள்ளிகள், அரசு விதிமுறைகளின்படி தங்களது உரிமத்தை புதுப்பித்துக்கொள்வதற்கான ஆவணங்களை விரைவில் தாக்கல் செய்ய வேண்டும். தவறினால், விதிமுறைகளை பின்பற்றாத பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆவணங்களை முறையாகப் புதுப்பிக்காமல் ஒரு சில தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டுவருவதாக சுட்டிக்காட்டியுள்ள மாவட்டக் கல்வித் துறை, அவற்றில் சில அரசுக்கு சொந்தமான நிலத்தில் இயங்கிவருவதாகவும், அரசு நிலத்தை முறைகேடாக பயன்படுத்தியிருப்பதோடு, இது தொடர்பாக விசாரணை நடத்தச் செல்லும் அதிகாரிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அரசு நில ஆக்கிமிப்புகளை அகற்றும் பணி, மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுடன் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ப்ளே ஸ்கூல் மற்றும் ஆரம்பப் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் தனித்தனியாக அந்தச் சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி, ப்ளே ஸ்கூல் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு 5.5 சென்ட் நிலம் மற்றும் 16.5 சென்ட் நிலம் 15 ஆண்டுகளுக்கு அந்தந்தப் பள்ளியின் பெயரில் ஆவணப்படுத்தப்பட வேண்டும். மாண்டிசோரி பயிற்சி உள்ளிட்ட பொருத்தமான கல்வித் தகுதி கொண்ட ஆசிரியர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையொட்டி, கோவையில் கடந்த 3 நாட்களாக ஜமாபந்தி நடத்தப்பட்டது. முதல் கட்டமாக மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில், மாவட்டம் முழுவதிலும் இருந்து மொத்தம் 240 பள்ளிகள் பங்கேற்றன. இதைத் தொடர்ந்து, வரும் வாரங்களில் ப்ளே ஸ்கூல் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கான ஜமாபந்தி நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...