திருநங்கைகளுக்கான சிறப்பு மருத்துவ மையம் - கோவை அரசு மருத்துவமனையில் தொடக்கம்!

கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் முதல் முறையாக திருநங்கைகளுக்கான சிறப்பு மருத்துவ மையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு திருநங்கைகளுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளன.


கோவை: கோவை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளுக்கு அதிநவீன பாலின வழிகாட்டுதல் வழங்கும் நோக்கில் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக் திறக்கப்பட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத்துறை தலைவர் டாக்டர். பி.பி. ரமணன், "திருநங்கைகளுக்காக எடுக்கப்பட்டுள்ள மிகச் சிறப்பான முயற்சி. இந்த கிளினிக்கில், திருநங்கைகளுக்குத் தேவையான மனநல ஆலோசனை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மற்றும் பாலின மாற்று சிகிச்சை தொடர்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்றார்.



கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தலைவர் டாக்டர்.நிர்மலா தலைமையில் நடைபெற்ற இந்த கிளினிக் திறப்பு விழா நிகழ்ச்சியில், திருநங்கைகள் சங்கத் தலைவர் உட்பட 50க்கும மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் சிம்ப்ளிசிட்டியுடன் பேசிய டாக்டர்.நிர்மலா, "மூன்றாம் பாலின சமூகத்தினருக்கு சிறப்பான மருத்துவ சேவையை வழங்குவதற்கான ஒரு முயற்சி இது என்றார். மேலும், இங்கு தேசிய சுகாதார இயக்கம் (NHM) மற்றும் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை அளிக்கப்படும். முதல் கட்டமாக, ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

வாரத்தின் பிற நாட்களில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த கிளினிக்கில் 5 முதல் 6 சிறப்பு மருத்துவர்கள் பணியில் இருப்பார்கள். வரும் நாட்களில் தொழில்நுட்பங்களை மேம்படுத்தி விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பாலின மாற்று அறுவை சிகிச்சையைப் பொறுத்தவரை, சரியான வழிகாட்டுதலுடன் அறுவை சிகிச்சை முறைகள் திட்டமிடப்படும்.

தேவைகளை நாங்கள் ஆராய்ந்த பிறகு அறுவை சிகிச்சை இங்கு மேற்கொள்ளப்படும், இல்லையென்றால் மாற்று வழிகள் முன்னெடுக்கப்படும். இது ஒரு நீண்ட கால செயல்பாடு என்பதால், தற்போதைக்கு வெளிநோயாளிகளுக்கான சிகிச்சைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் மையமாக இது இருக்கும், என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...