கோவையில் போதை மாத்திரைகள், போதை ஊசிகள் பறிமுதல் - இளைஞர்கள் 3 பேர் கைது

கோவை மசக்காளிபாளையம் பகுதியில் இரவு நேரத்தில் போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகளை விற்பனை செய்துவந்த யாசின், அன்வர் சாதிக், சுல்தான் பாஷா என 3 பேரை போலீசார் கைது செய்தனர்.



கோவை: கோவை மாநகரில் போதை பொருள் புழக்கத்தை தடுப்பதற்காக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சில இளைஞர்கள் போதை மாத்திரை விற்பதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

அதன்பேரில், போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்திய நிலையில் மசக்காளிபாளையம் பகுதியில் கார்ப்பரேஷன் பள்ளி அருகே சந்தேகத்துக்கு இடமாக மூன்று இளைஞர்கள் நின்றிருந்தனர். அவர்களைப் பிடித்து விசாரித்தபோது, போதைக்காக மாத்திரைகளை விற்று வருவது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அவர்கள் மூன்று பேரும், இறைச்சிக் கடையில் வேலை பார்க்கும் ரத்தினபுரி பகுதியைச் சார்ந்த ஷாம் என்கிற யாசின் (வயது28) , ஓட்டுனராக பணியாற்றி வரும் போத்தனூரைச் சார்ந்த அன்வர் சாதிக் (வயது28), பெயிண்டிங் வேலை பார்க்கின்ற சாரமேடு பகுதியைச் சார்ந்த சுல்தான் பாஷா (வயது27) என்பது உறுதியானது.

இதையடுத்து, சிங்காநல்லூர் போலீசார் இவர்களை உடனடியாக கைது செய்து, அவர்களிடமிருந்து டேபண்டடால் 100 எம் ஜி 168 மாத்திரைகள், டேபண்டடால் 50 எம் ஜி 190 மாத்திரைகள், மாத்திரைகளை கலக்க பயன்படுத்தும் சோடியம் குளோரைடு இன்ஜெக்சன் பிளாடிக் பாட்டில் 32 , பயன்படுத்தப்பட்ட ஊசி 10, பயன்படுத்தப்படாத ஊசி 14 உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், போதைக்காக மாத்திரை விற்பனையில் ஈடுபட்டிருந்த வாலிபர்கள் கைது செய்யப்பட்டு அதிரடியாக சிறையில் அடைக்கப்பட்டனர். சமூகத்தில் தீங்கை தரும் போதை பொருட்களை விற்போர் மீது சட்டப்படின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலிஸார் எச்சரிக்கை மணி அடித்திருக்கின்றனர் .

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...