கோவையில் ஆம்புலன்சில் பிரசவம் - டிரைவர், மருத்துவ உதவியாளருக்கு குவியும் பாராட்டு!

கோவை சுல்தான்பேட்டையில் பிரசவத்திற்காக அழைத்துச்செல்லப்பட்ட கர்ப்பிணிக்கு 108 ஆம்புலன்சிலேயே பிரசவம் ஆகி அழகான குழந்தை பிறந்தது. துரிதமாக செயல்பட்டு தாய், சேய் உயிரைக் காப்பாற்றிய மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவருக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.


கோவை: கோவை சுல்தான்பேட்டை வாரப்பட்டியைச் சேர்ந்த பிரியா என்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவரது கணவர் சிவராஜ் உடனடியாக 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்து, சந்திராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச்சென்றார்.

இந்நிலையில், ஆம்புலன்ஸ் சூலூர் ராவுத்தர் பிரிவு அருகே சென்றபோது, பிரியாவுக்கு பிரசவ வலி அதிகரித்து குழந்தையின் தலை வெளியே தெரியத் தொடங்கியது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் ராஜேஸ்வரி, அவசரகால ஓட்டுநர் தண்டாயுதபாணி உதவியுடன் ஆம்புலன்சில் அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்து, தாய் மற்றும் குழந்தையைக் காப்பாற்றினார்.

பின்னர் தாயும், குழந்தையும் சூலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குழந்தை மற்றும் தாயின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்தனர்.

கர்ப்பிணிப் பெண்ணுக்கு உரிய நேரத்தில் பிரசவம் பார்த்து உயிரைக் காப்பாற்றிய மருத்துவ உதவியாளர் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவருக்கு அங்கிருந்தவர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

Newsletter

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....