மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் - கடந்தாண்டை விட இந்தாண்டு பயன்பெறும் மாணவிகளின் எண்ணிக்கை உயர்வு!

அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வியில் சேர்ந்துள்ள மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தில் கடந்தாண்டு, 71,008 மாணவிகள் பயன்பெற்றனர். நடப்பாண்டில் 91,485 மாணவிகள் பயன்பெற்றுள்ளனர். இதன்படி கடந்தாண்டை விட நடப்பாண்டில் 20,000க்கும் மேற்பட்ட மாணவிகள் பயன்பெற்றுள்ளனர்.


சென்னை: மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் பயன்பெறும் மாணவிகளின் எண்ணிக்கை 20ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில், ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த பெண்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், திருமண உதவிக்காக திமுக ஆட்சியின் போது, மூவலூர் ராமாமிர்தம் திருமண நிதி உதவி திட்டம் கொண்டு வரப்பட்டது.

அதன்படி, திருமணத்தின் போது, மணப்பெண்ணின் கல்வித்தகுதியை அடிப்படையாக கொண்டு ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை நிதி உதவி வழங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2011 ஆம் ஆண்டுக்குப் பின் இத்திட்டத்தில் நிதியுதவியுடன் 4 கிராம் மற்றும் 8 கிராம் அளவில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டமும் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், தற்போதைய சூழலுக்கு ஏற்ப பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த அரசு பள்ளிகளில் கற்கும் மாணவிகளின் உயர் கல்வியை உறுதி செய்யும் வகையில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டமானது புதுமைப்பெண் திட்டம் என மாற்றி அமைக்கப்பட்டது.

புதுமைப்பெண் என்ற பெயரில் கடந்த 2022ஆம் ஆண்டும் ஆசிரியர் தினத்தையொட்டி செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் இந்த திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி உறுதித்‌ திட்டத்தின்கீழ் மாதம் தோறும் ரூ.1,000 உயர்கல்வி உறுதி தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 2021 - 2022 கல்வியாண்டில் 71,008 மாணவிகள் பயன்பெற்றனர். இந்நிலையில், 2022 - 2023ஆம் கல்வியாண்டில் 91,485 மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இதன்படி கடந்த ஆண்டை விட 20477 மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...