வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டுப்பன்றிகளை நீக்க வேண்டும் - உடுமலை விவசாயிகள் கோரிக்கை!

உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுப்பன்றிகள், விளைநிலங்களில் புகுந்து நிலக்கடலை, மக்காச்சோளம், மா, தென்னை உள்ளிட்ட பயிர்கள் மட்டுமல்லாது பாசன கட்டமைப்பையும் சேதப்படுத்துவதால் வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டுப்பன்றிகளை நீக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


திருப்பூர்: உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டுப்பன்றிகளை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரங்களில் அனைத்து பகுதிகளிலும் காட்டுப்பன்றிகளால் நாள்தோறும் பல்வேறு பிரச்சனைகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.

வன எல்லை பகுதிகளில் மட்டுமல்லாது வெகு தொலைவில் உள்ள கிராமங்களிலும் காட்டுப்பன்றிகள் பெருக்கம் அதிகரித்துள்ளது அப்பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை, மக்காச்சோளம், மா, தென்னை மற்றும் காய்கறி சாகுபடியிலும் காட்டு பன்றிகள் தொடர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

காட்டுப்பன்றிகள் நடமாட்டத்தால், இரவு நேரங்களில் விளைநிலங்களுக்கும், கிராம இணைப்பு சாலைகளுக்கு செல்லவும் விவசாயிகள் அச்சப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, காட்டுப் பன்றிகளால் பல்லாயிரம் ஏக்கரில் செய்யப்பட்டுள்ள விவசாய சாகுபடி கேள்விக்குறியாகி வருகின்றது பயிர்களை அழித்தல், விலை பொருட்கள் மற்றும் பாசன கட்டமைப்புகளை சேதப்படுத்துதல் என பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

வனத்துறையினர் இந்த பிரச்சினைக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்டு வருகின்றனர். பாதிப்புகளுக்கு நிவாரணம் கிடைப்பதில்லை ஆகையால் வனவிலங்கு பட்டியிலில் இருந்து காட்டுபன்றியை நீக்க வேண்டும் இதற்கான கருத்துருவை வனத்துறையினர் வருவாய்த்துறை இணைந்து அரசுக்கு அனுப்ப வேண்டும், என்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...