மேட்டுப்பாளையம் அருகே விவசாயிகளின் 68 ஏக்கர் நிலம் தனியாருக்கு மாற்றி பதிவு - ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா!

மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டி, ஓடந்துறை, சிக்கதாசன் பாளையம் உள்ளிட்ட கிராமத்தில் விவசாயிகளுக்கு சொந்தமான 68 ஏக்கர் நிலத்தை பத்திரபதிவு துறை மற்றும் கூட்டுறவு சங்கம் இணைந்து 2018ஆம் ஆண்டு தனியாருக்கு மாற்றி பதிவு செய்ததாக கூறி ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதி தேக்கம்பட்டி, ஓடந்துறை, சிக்கதாசன் பாளையம் உள்ளிட்ட கிராம மக்களின் சொத்துக்களை மாற்றி பத்திரம் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து அப்பகுதி விவசாய மக்கள், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பின்னர் அங்கு வந்த காவல் துறையினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும்படி பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது,

தங்கள் பகுதியில் உள்ள 68 ஏக்கர் அளவிலான விவசாயிகளின் நிலத்தை, 2018 ஆம் ஆண்டு போலி ஆவணம் தயாரித்து பதிவு துறையும், கூட்டுறவு சங்கமும் இணைந்து தனியாருக்கு பட்டா பதிவு செய்துள்ளது.

சுமார் 60 ஆண்டு காலமாக அந்த நிலத்தின் பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் தங்களிடம் உள்ளது. இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு எந்த ஒரு ஆதார ஆவணங்களும் இல்லாமல் பத்திரப்பதிவு துறையினர் தனியாருக்கு பதிவு செய்துள்ளனர்.



இதனை கண்டித்தே இன்று தர்ணாவில் ஈடுபட்டோம். இது குறித்து முன்னரே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் தற்போது 77A என்ற சட்டம் வந்துள்ளதால் இதனை இந்த பிரிவின் கீழ் தான் விசாரிக்க வேண்டும் என கூறி தனிப்பட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணை வேறு வழியில் திரும்பி இதனை சிவில் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டனர். இந்த பத்திரப்பதிவு செய்த துறையினரை தாங்கள் செய்து தவறு என ஏற்றுக்கொண்டு உள்ளனர். அதன் பிறகும் உரிய விசாரணை மேற்கொண்டு தங்களுக்கான நிலத்தை மீட்டு தரப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதில் தலையிட்டு தங்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...