சாணி பவுடர் கலந்த நீரை குடித்து மாற்றுத்திறனாளி தற்கொலை முயற்சி - கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

மேட்டுப்பாளையம் அருகே கடையை தாக்கி சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததால், மன உளைச்சலுக்கு ஆளான மாற்றுத்திறனாளியான முகமது சாதிக் பாஷா என்பவர், கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த அவர், சாணி பவுடர் கலந்த நீரை குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவையில் கடையை மீட்டு தரக்கோரி மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி ஒருவர் சாணி பவுடர் கலந்த நீரை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை சாலையில் உள்ள ஸ்ரீ ரங்கராய ஓடை பகுதியில் வசித்து வருபவர் முகமது சாதிக் பாஷா. மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இவர் கோத்தகிரி சாலையில் ஓடந்துறை செக் போஸ்ட் அருகில் கடைஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்னர் கடையை உடனடியாக காலி செய்ய வேண்டும் எனஉரிமையாளர் கூறியதை அடுத்து, இரண்டு மாதங்கள் அவகாசம் கேட்டுள்ளார். ஆனால் அவகாசம்தர உரிமையாளர் மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடையை உடைத்து சுமார் ரூ.7 லட்சம் மதிப்புள்ள பொருட்களை சிலர் திருடி சென்றுள்ளனர். இதனை அடுத்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் சாதிக் பாட்ஷா இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார். காவல் நிலையத்தில் சிஎஸ்ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது ஆனால் எப்.ஐ.ஆர் இதுவரை போடவில்லை என கூறப்படுகிறது.

இது தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுஅளிக்க வந்தபோது இவர் தீக்குளிக்க முயன்றார். அப்போது, போலீசார் இவரிடம் எச்சரித்து அனுப்பினர். இதனிடையே ஓராண்டுக்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி இன்று மீண்டும் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார்.



அப்போது ஆட்சியர் அலுவலகம் முன்பு போலீசார் சோதனை செய்வதை அறிந்து கொண்ட அவர், உடனடியாக தன் பையில் மறைத்து வைத்திருந்த சாணி பவுடர் கலந்த நீரை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக போலீசார் ஓடி சென்று அவரிடம் இருந்த சாணி பவுடர் கலக்கிய குடிநீர் பாட்டிலை அப்புறப்படுத்தினர்.



பின்னர் அவரை உடனடியாக ஒரு ஆட்டோவில் கோவை அரசு மருத்துவமனைக்குசிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே தீக்குளிக்க முயற்சியில் ஈடுபட்ட அவர் சுமார் ஒன்பது மாதங்கள் கழித்து மீண்டும் சாணி பவர் குடித்து தற்கொலை முயற்சியில் இரண்டாவது தடவையாக ஈடுபட்டுள்ளார்.



இதனை கண்ட பொதுமக்கள் மாற்றுத்திறனாளியின் நிலை கண்டு பரிதாபப் பட்டதுடன், மாவட்ட நிர்வாகம் உடனடியாக மாற்றுத்திறனாளிசாதிக் பாஷாவின் மனுவை பரிசீலிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இரண்டாவது முறையாக மாற்றுத்திறனாளி தற்கொலைக்கு முயன்ற இச்சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...