கோவை மாவட்ட கல்லூரிகளில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை - வாட்ஸ்-அப் குழுக்கள் துவங்க அறிவுறுத்தல்!

கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பதற்காக, கல்லூரிகளில் anti drug awareness எனும் whatsapp குழுக்களை தொடங்கவும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.


கோவை: கோவை மாவட்ட கல்லூரிகளில் anti drug awareness வாட்ஸ் அப் குழுக்கள் தொடங்க காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட காவல்துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் “மாணவர்களிடையே போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு கிளப்” என்ற திட்டம் காவல்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும், இந்த கிளப்பை தொடங்க போலீசார் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இத்திட்டத்தின் மூலம் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு கிளப்பை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் துவங்கி வைத்தார்.



இந்நிலையில் கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் அனைத்து கல்லூரி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



இதில் கோவை சரக காவல்துறை தலைவர் விஜயகுமார் மற்றும் கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது மாணவர்களிடையே போதை பழக்கத்தை தடுக்க கல்லூரி நிர்வாகத்தில் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் எனவும் தெரிவித்தனர்.

அதேபோல் கல்லூரி மாணவர்களிடையே போதைப் பொருட்களையும் விற்பனை செய்பவர்களையும் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், ஒவ்வொரு கல்லூரிகளிலும் “anti drug awareness “ என்ற whatsapp குழுக்களை தொடங்கவும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் மாதம் ஒருமுறை காவலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில், அறிவுரைகள் நடத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இதே போல் போலீசாரின் போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளில், கல்லூரி நிர்வாகங்களும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதாகவும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செய்ய உள்ளதாகவும், கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.



இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி நிர்வாகிகள், கல்லூரி முதல்வர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...