மாநகர பெண் காவலர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி - கோவை காவலர் பயிற்சிப்பள்ளி மைதானத்தில் தொடக்கம்!

காவல்துறையில் பெண் காவலர்கள் சேர்க்கப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவையொட்டி, "COPஅவள்" எனும் கோவை மாநகர பெண் காவலர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சியை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.


கோவை: பெண் காவலர்கள் காவல்துறை பணியில் சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவுரையின்படி மாநகரில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு காவல் வாகனங்களை ஓட்டுவதற்கு ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது.



கோவையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் இன்று அதற்கான தொடக்க விழா நடைபெற்றது.



"COPஅவள்" என்ற இந்த நிகழ்வில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு ஓட்டுனர் பயிற்சியை தொடங்கி வைத்தார்.



அப்போது பேசிய ஆணையர் பாலகிருஷ்ணன், "முதல் கட்டமாக கோவை மாநகர தாலுகா காவல் நிலையம் மற்றும் ஆயுதப்படையில் பணியாற்றி வரும் 150 பெண் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், நான்கு சக்கர வாகனம், இரு சக்கர வாகனம் இரண்டிற்கும் பயிற்சி அளிக்கப்பட்டு ஓட்டுனர் உரிமம் பெற்று தரப்படவுள்ளது. ஏற்கனவே, ஓட்டுநர் உரிமம் உள்ளவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்படும்", என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர் ஆயுதப்படை காவல்துறை ஆணையர் முரளிதரன், தலைமையிட காவல் துணை ஆணையர் சுகாசினி, ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...