ராகுல் காந்தி பதவி பறிப்பு விவகாரம்: கோவையில் வெல்ஃபேர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ராகுல் காந்தியின் எம்.பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வெல்ஃபேர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.


கோவை: ராகுல் காந்தியின் எம்.பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் வெல்ஃபேர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும் பாஜக அரசை கண்டித்தும் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகள் சார்பிலும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.



அதன் தொடர்ச்சியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வெல்ஃபேர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



அக்கட்சியின் மாவட்ட தலைவர் முஜ்புர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பப்பட்டது.

இதில் வெல்ஃபேர் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் மணிமாறன், செயலாளர் சிக்கந்தர் பாஷா உட்பட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மகளிர் அணி பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...

கோவை மேற்கு மண்டலத்தில் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நடைபயணம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.38க்குட்பட்ட கல்வீரம்பாளையம் பள்ளி முதல் பொம்மனாம்பாளையம் கோயில் வரை, குப்பைகள...