பொள்ளாச்சி அருகே பத்ரகாளி அம்மன் கோவிலில் பூ மிதி குண்டம் திருவிழா - பக்தர்கள் தரிசனம்!

பொள்ளாச்சி போடிபாளையம் - குளத்தூர் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்ரகாளி அம்மன் கோவில் பூ மிதி குண்டம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


பொள்ளாச்சி: போடிபாளையம் - குளத்தூர் கிராமத்தில் பழமை வாய்ந்த பத்ரகாளி அம்மன் கோவில் பூ மிதி குண்டம் திருவிழா நடைபெற்றது.

பொள்ளாச்சி அருகே உள்ள போடிபாளையம் குளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும் இக்கோவிலின் குண்டம் பூ மிதி திருவிழா ஆண்டு தோறும் பங்குனி மாதம் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்தாண்டு திருவிழா கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் தமிழகத்தில் பல்வேறு திருத்தலங்களில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வந்தும், 5 நாட்கள் பூவோடு எடுத்து அம்மனை வழிபட்டனர்.



இதனைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் பூ மிதி திருவிழா இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

இதில் குண்டம் இறங்கும் பக்தர்கள் ஊர் எல்லையில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து பத்ரகாளி அம்மனை வனங்கினர்.



பின்னர் 50 அடி நீளமுள்ள குண்டத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.இந்த திருவிழாவில் சுற்று வட்டார பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.



பத்ரகாளியம்மன் நினைத்து வேண்டிய காரியங்கள் அனைத்தும் கை கூடி வருவதால் 15 நாட்கள் கடும் விரதம் இருந்து பக்தர்கள் குண்டம் இறங்கிநேர்த்தி கடன் செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளதாக பக்தர்கள் பரவசத்துடன் தெரிவித்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...