கோவைக்கு வந்த புதிய வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

பெங்களூரில் இருந்து கோவை மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட 5000 புதிய வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள பாதுகாப்பு அறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் ஆய்வு செய்தார்.


கோவை: கோவைக்கு கொண்டு வரப்பட்ட 5000 புதிய வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேர்தல் பயன்பாட்டிற்கு என்று 7,579 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 4436 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு எந்திரங்களும், 1310 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.



மேலும் தற்போது, கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பெங்களூர் பெல் நிறுவனத்திலிருந்து வரப்பெற்ற 5000 புதிய வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள், தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள பாதுகாப்பு அறையில் இருப்பு வைக்கப்படுகிறது.



இந்த வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார்பாடி இன்று நேரில் பார்வையிட்டார்.



இந்த நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பொ) குணசேகரன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) விஜயலெட்சுமி, மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...