பொதுயிடங்களில் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும்..! - கோவை மாவட்ட சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

கோவை மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 10-க்கு கீழ் வந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் பொது இடங்களில் முக கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.


கோவை: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொது இடங்களில் முக கவசம் அணிய வேண்டும் என்று கோவை மாவட்ட சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த வாரத்தில் தினமும் 15 முதல் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 10-க்கு கீழ் வந்துள்ளது. கொரோனா காரணமாக தற்போது 90 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், மாவட்டத்தில் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் மருத்துவமனைகள், தியேட்டர், வணிக வளாகங்கள் போன்ற இடங்களுக்கு பொதுமக்கள் செல்லும் போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது,

கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால், பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. மூச்சு திணறல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் வரும் நோயாளிகள் மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சிகிச்சையில் உள்ளவர்களில் 90 சதவீதம் பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். தன்னிச்சையாக மருந்துகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. மேலும், மருத்துவமனைகள், வணிக வளாகம், தியேட்டர், பேருந்துகளில் செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். இதனால், கொரோனா பரவலை தடுக்க முடியும். தடுப்பூசி செலுத்தாத நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...