நீட்தேர்வு விவகாரம் -கோவையில் தேசிய குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினர் உளறல் பேச்சு

கோவையில் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தை ஆய்வு செய்த தேசிய குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த், நீட் தேர்வு விவகாரம் குறித்த கேள்விகளுக்கு மாற்றிமாற்றி பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் தேசிய குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் மற்றும் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட எஸ்.பி. பத்திநாராயணன் ஆய்வு மேற்கொண்டனர்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.ஜி.ஆனந்த். கூர்நோக்கு இல்லங்களில் இருந்து புகார்கள் வந்ததை தொடர்ந்து, கடந்த மார்ச் 26 முதல் தமிழகம், ஆந்திரா, கர்நாடாக உள்ளிட்ட 5 மாநிலங்களில் உள்ள 21 கூர்நோக்கு இல்லங்களில் தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் சார்பில் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுவரை 14 கூர்நோக்கு இல்லங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனி தஞ்சாவூர், திருச்சி , திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள கூர்நோக்கு இல்லங்களை ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.



கோவையில் உள்ள கூர்நோக்கு இல்லம் அமைந்துள்ள இடம் சுற்றுச்சூழல் நன்றாக உள்ளது. சிறார்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். கோவை கூர்நோக்கு இல்லத்தை முறையாக பராமரித்து வரும் மாவட்ட நிர்வாகத்திற்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.



ஏற்கனவே ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மாசி செயலி மூலம் இந்தியா முழுவதும் உள்ள கூர்நோக்கு இல்லங்களை டெல்லியில் இருந்தவாறு ஆய்வு செய்து வருகிறோம்.

அதேபோல கோவை மாவட்ட போலீஸ் சார்பில் புரோஜெட் பள்ளிக்கூடம் என்ற திட்டத்தின் மூலம் 2.5 லட்சம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டுள்ளது நல்ல விஷயம். இதன் மூலம் பள்ளிக்குழந்தைகளுக்கு விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.

குழந்தை திருமணம் தடுக்கப்பட்டுள்ளது, அதிக புகார்கள் பதிவாகி வருகிறது.

தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக ரயில்முன் பாய்ந்து மாணவி உயிரிழந்ததாக வெளியான சம்பவம் தொடர்பாக பேசியபோது, நீட் தற்போது மாற்ற முடியாது, அவசியமான தேர்வு என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஆனால், சமூக விரோதிகள் மாற்றி மாற்றி கூறிவதால் மாணவர்களிடையே குழப்பம் ஏற்படுகிறது என கூறினார்.

இதையடுத்து செய்தியாளர்கள் அரசின் கொள்கை முடிவை விமர்சிப்பதா என கேள்வி எழுப்பியபோது, சமூக விரோதிகள் என கூறவில்லை, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பபடுவதாக கூறினேன் என தெரிவித்ததோடு, பதிலை சரியாக கூறாமல் தடுமாறினார்.

நீட் தேர்வு குறித்து அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். மதமாற்றம், போதைப்பொருள் தொடர்பாக அதிக புகார்கள் வந்துள்ளது. ஆனால், மதமாற்றம் மற்றும் போதைப்பொருட்கள் கோவை கூர்நோக்கு இல்லங்களில் இல்லை.

அம்பாசமுத்திரம் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களில் சிறார்கள் இல்லை, சிறார்களாக இருந்தால் நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...