கோவையில் குற்றச் செயல்களைத் தடுக்க நடவடிக்கை - கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தம்

கோவை திருமலைநாயக்கன்பாளையத்தில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட 11 கண்காணிப்பு கேமிராக்களை பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் பயன்பாட்டிற்கு தொடங்கிவைத்தார்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் தனியார் பங்களிப்புடன் பெரியநாயக்கன்பாளையம் காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் தாமோதரன் ஆகியோர் பல்வேறு முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்களை அமைத்து வருகின்றனர்.



அதன் இயக்கங்கள் அனைத்து பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பெரியநாயக்கன்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட திருமலை நாயக்கன்பாளையத்தில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் ஜோதிபுரத்தைச் சேர்ந்த சுபா பிளாஸ்டிக் என்ற தனியார் நிறுவனம் 1.5 லட்சம் செலவில் 11 கண்காணிப்பு கேமிராக்களை அமைத்துக் கொடுத்துள்ளனர்.



இதன் தொடக்க விழாவில் பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் கலந்து கொண்டு 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்களை ரிப்பன் வெட்டி பயன்பாட்டிற்கு தொடங்கிவைத்தார்.



அப்போது, கண்காணிப்பு கேமிராக்கள் அமைத்துக் கொடுத்த சுபா பிளாஸ்டிக்ஸ் நிறுவன உரிமையாளர் பாஸ்கரன் மற்றும் அதற்கு உதவியவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.



நிகழ்ச்சியில் பேசிய துணை காவல் கண்காணிப்பாளர், குற்ற நடவடிக்கைகளை தடுக்க பல லட்சம் மதிப்பில் வீடுகளை கட்டுவோர் சில ஆயிரம் மதிப்பில் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...