புனித வெள்ளி அனுசரிப்பு - சிலுவையை சுமந்தபடி கிறிஸ்தவர்கள் ஊர்வலம்

புனித வெள்ளியையொட்டி, கோவையிலும் பல்வேறு இடங்களில் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டு வருகிறது. உக்கடம் அருகே உள்ள புனித செபஸ்டியார் ஆலய மக்கள் இன்று சிலுவையை சுமந்தபடி ஊர்வலம் மேற்கொண்டனர்.


கோவை: கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் கணத்த நாளாக அனுசரிக்கப்படும் புனித வெள்ளி இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இயேசுவை சிலுவையில் அறைந்த நாளாக அனுசரிக்கப்படும் இந்த நாளை கிறிஸ்துவர்கள் அனைவரும் சோக நாளாக அனுசரிக்கின்றனர்.



இன்றிலிருந்து மூன்றாம் நாள் இயேசு உயிர்தெழுந்த நாளாக ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும். புனித வெள்ளி தினமான இன்று கிறிஸ்தவர்கள் பலரும் சிலுவையை சுமந்தபடி ஊர்வலம் மேற்கொள்வர். அதன்படி, கோவையிலும் பல்வேறு இடங்களில் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக உக்கடம் அருகே உள்ள புனித செபஸ்டியார் ஆலய மக்கள் இன்று சிலுவையை சுமந்தபடி ஊர்வலம் மேற்கொண்டனர்.



பெரியக்கடை வீதியில் உள்ள புனித மைக்கேல் ஆலயத்தில் இருந்து சிலுவையை சுமந்தபடி ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிறித்துவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...